எனது அந்த கடைசி ஓவரில் ஜடேஜா 37 ரன்கள் அடிக்க இதுவே காரணம் – ஹர்ஷல் படேல் ஓபன்டாக்

Harshal
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி பர்ப்பிள் கேப்பை வென்ற ஹர்ஷல் படேல் சென்னை அணிக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டும் தனது மோசமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். குறிப்பிட்ட அந்த போட்டியில் கூட முதல் 3 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தியிருந்த ஹர்ஷல் படேல் தனது கடைசி ஓவரை ஜடேஜாவிற்கு எதிராக வீசினார். அந்த 20 ஆவது ஓவரில் மட்டும் 4 சிக்சர் ஒரு பவுண்டரி என ஜடேஜா 37 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

அந்த போட்டியில் பெங்களூரு அணியின் தோல்விக்கு அந்த ஒரு ஓவரே காரணமாக அமைந்தது. ரவீந்திர ஜடேஜா 28 பந்துகளில் 62 ரன்களை குவிக்க அந்த போட்டியில் 19-வது ஓவரை சாதாரண நிலையில் இருந்த சென்னை அணியானது 20-வது ஓவரின் முடிவில் பலமான இடத்திற்கு சென்றது. அதன் பின்னர் விளையாடிய பெங்களூரு அணியானது அவர்கள் நிர்ணயித்த இலக்கை தாண்ட முடியாமல் தோல்வியை சந்தித்தது.

இப்படி அந்த போட்டியில் பெங்களூரு அணி தோல்வியை சந்திக்க அந்த ஒரு ஓவர் தான் காரணம் என்றால் அது மிகை அல்ல. அந்த அளவிற்கு அந்த கடைசி ஓவரில் 37 ரன்கள் பறந்தன. இந்நிலையில் தனது பந்து வீச்சில் ஜடேஜா 37 ரன்கள் அடிக்க என்ன காரணம் என்பது குறித்து ஹர்ஷல் படேல் தற்போது பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : கிரிக்கெட் போட்டிகளில் இதுபோன்று சிலமுறை நடப்பது சகஜம்தான்.

Jadeja

11 ஆண்டுகளாக நான் கிரிக்கெட் விளையாடி வருகிறேன். அதனால் இந்த ஒரு தருணம் குறித்து யோசித்தால் அது தேவையில்லாத ஒன்று. அதனை கடந்து நாம் விளையாடி ஆகவேண்டும். அன்றைய போட்டியில் நான் சில தவறுகளை செய்தது உண்மைதான். ஆனாலும் அன்றைய நாள் ஜடேஜாவுக்கு சிறந்த நாளாக அமைந்துவிட்டது. அதன் காரணமாகவே அவர் எந்த பந்தையும் மிஸ் பண்ணாமல் அடித்துவிட்டார்.

- Advertisement -

இதையும் படிங்க : ராகுல் செய்த இந்த தவறால் தான் இந்திய அணி 2 ஆவது டெஸ்டில் தோற்றது – கவாஸ்கர் ஓபன்டாக்

அந்த ஓவரில் நான் சிறப்பாக பந்து வீச நினைத்தும் ஒரு யார்க்கர் கூட வீச முடியவில்லை. ஆனால் அவருக்கு அந்த நாள் சிறப்பாக அமைந்ததால் அனைத்து பந்துகளையும் விளாசி விட்டார் என்று ஹர்ஷல் படேல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement