ராகுல் செய்த இந்த தவறால் தான் இந்திய அணி 2 ஆவது டெஸ்டில் தோற்றது – கவாஸ்கர் ஓபன்டாக்

Gavaskar
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்க அணியை வீழ்த்தி இருந்தது. அதனை தொடர்ந்து ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் விராத் கோலி முதுகுவலி காரணமாக விளையாட முடியாமல் போனதால் கே.எல் ராகுல் இந்திய அணியின் கேப்டனாக அணியை முதமுறையாக வழி நடத்தினார்.

Elgar

- Advertisement -

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இதன் காரணமாக தற்போது இந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3வது போட்டி 11-ம் தேதி கேப்டவுனில் துவங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி கோப்பையை கைப்பற்றும் என்பதனால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்த போட்டியின் மீது எழுந்துள்ளது.

இந்நிலையில் நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்விக்கு ராகுல் செய்த தவறு தான் காரணம் என்று கவாஸ்கர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் சுலபமாக சிங்கிள்ஸ்களை எடுத்து விளையாடினார். இதனால் அவருக்கு பேட்டிங் செய்வது எளிதாக அமைந்தது.

Rahul-1

மேலும் அவர் பெரிதாக ஹூக் ஷாட் விளையாடும் வீரர் கிடையாது. ஆனாலும் அவருக்கு எல்லைக்கோட்டிற்கு அருகே 2 வீரர்கள் நிற்க வைக்கப்பட்டிருந்தார்கள். அது தேவையில்லாத ஒன்று இதன் காரணமாக அவருக்கு சிங்கிள்ஸ் எளிதாக கிடைத்தது. அதனால் அவர் பேட்டிங்கிலும் ஒரு நம்பிக்கை பிறந்தது. இந்த போட்டியில் இந்தியா தோற்றது என்று சொல்வதை விட தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்று விட்டது என்றே கூறலாம்.

- Advertisement -

இதையும் படிங்க : வார்னர், ஷ்ரேயாஸ் ஐயர், பாண்டியா மூவரையும் மெகா ஏலத்திற்கு முன் எடுக்கவுள்ள அணி – எது தெரியுமா?

அந்த அளவிற்கு தென் ஆப்பிரிக்கா சிறப்பாக விளையாடியது. கேப்டன் ராகுல் செய்த சிறிய சிறிய தவறுகள் தோல்விக்கு காரணமாக அமைந்தன. இதுபோன்ற போட்டிகளில் இருந்து தான் அவர் அனுபவத்தை கற்றுக்கொள்ள முடியும். நிச்சயம் இனி அவர் கேப்டன்சி செய்தால் இதுபோன்ற குறைகளை திருத்திக்கொண்டு விளையாடுவார் என்று கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement