வார்னர், ஷ்ரேயாஸ் ஐயர், பாண்டியா மூவரையும் மெகா ஏலத்திற்கு முன் எடுக்கவுள்ள அணி – எது தெரியுமா?

ahd
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் தொடரானது இதுவரை 14 சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த வேளையில் 15 வது சீசன் வரும் ஏப்ரல் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடருக்கான போட்டிகளில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் சேர்த்து இந்த ஆண்டு புதிதாக இரண்டு அணிகள் இணைந்து மொத்தம் 10 அணிகள் இந்த தொடரில் பங்கேற்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதற்கேற்றார்போல் புதிய 2 அணிகளுக்கான ஏலம் நடத்தப்பட்டு அதில் அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய நகரங்களின் தலைமையில் இரு அணிகள் வாங்கப்பட்டுள்ளன.

IPL
IPL Cup

இந்நிலையில் இந்த இரண்டு புதிய அணிகளும் எந்தெந்த வீரர்களை ஏலத்தில் முன்பாக எடுக்கப் போகிறார்கள் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனெனில் ஏற்கனவே உள்ள 8 அணிகளும் தங்கள் அணியில் நான்கு வீரர்களை தக்க வைக்கலாம் என்கிற அடிப்படையில் அவர்களின் பட்டியலை வெளியிட்டது.

- Advertisement -

இந்நிலையில் மெகா ஏலத்திற்கு முன்பாக லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இவ்விரு அணிகளும் 3 வீரர்களை நேரடியாக வாங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது இந்த ஐபிஎல் தொடரில் புதிதாக விளையாடும் இருக்கும் அகமதாபாத் அணி 3 முக்கிய வீரர்களை டார்கெட் செய்து உள்ளது.

iyer

அந்த வகையில் சன்ரைசர்ஸ் அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட வார்னர் மற்றும் மும்பை அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஹர்டிக் பாண்டியா ஆகியோரை அகமதாபாத் அணி ஏலத்திற்கு முன்னதாக எடுக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : 3 ஆண்டுகளுக்கு பிறகு அணியில் இடம்பிடித்து 2 இன்னிங்சிலும் சதம் அடித்த ஆஸி வீரர் – அசத்தலான ஆட்டம்

அதோடு கேப்டன் பதவி வழங்கப்படாததால் டெல்லி அணியில் இருந்து தானாக முன்வந்து வெளியேறிய ஷ்ரேயாஸ் ஐயரை கேப்டனாகவும் மெகா ஏலத்திற்கு முன்னதாக அகமதாபாத் அணி எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement