ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. கடைசியாக கம்பீரின் தலைமையில் சாம்பியன் பட்டம் வென்றிருந்த கொல்கத்தா அணியானது தற்போது கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு கழித்து சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது அந்த அணியின் நிர்வாகத்திற்கும் மகிழ்ச்சி அளித்திருந்தது.
கொல்கத்தா அணிக்கு அடுத்த கேப்டன் யார்? :
இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில் அக்டோபர் 31-ம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதன் காரணமாக அக்டோபர் 31-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிடும் என்று தெரிகிறது. இந்நிலையில் கொல்கத்தா அணியானது தங்கள் அணியில் கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயரை மூன்றாவது வீரராகவே தக்க வைக்க நினைக்கிறது.
அப்படி மூன்றாவது வீரராக தக்கவைக்கப்படும் அவருக்கு 11 கோடிக்கு மட்டுமே சம்பளமாக கொடுக்க நினைக்கிறது. கொல்கத்தா அணி சார்பாக முதலாவதாக ஆண்ட்ரே ரசலையும், இரண்டாவது வீரராக வருண் சக்கரவர்த்தியையும் அவர்கள் தக்கவைக்க நினைக்கிறார்கள். இதன் காரணமாக அதிகபட்ச சம்பளம் அவர்களுக்கு செல்லும்.
அதேவேளையில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு 11 கோடி மட்டுமே கிடைக்கும் என்று தெரிகிறது. கேப்டன் பதவியில் இருந்து சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த அவர் இப்படி ஒரு சம்பள குறைவை நிச்சயம் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்றே தெரிகிறது. அப்படி ஏற்றுக்கொள்ளாமல் அவர் கொல்கத்தா அணியிலிருந்து வெளியேறும் பட்சத்தில் அவரை வாங்க லக்னோ மற்றும் ஆர்சிபி அணிகள் போட்டியிடும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : வெறும் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடிய மாயங்க் யாதவிற்கு 14 கோடி – எதற்காக தெரியுமா?
இந்நிலையில் ஒருவேளை ஷ்ரேயாஸ் ஐயர் அப்படி கொல்கத்தா அணியிலிருந்து வெளியேறினால் அவருக்கு பதிலாக கேப்டனாக நிதீஷ் ராணாவை நியமிக்க அந்த அணியின் நிர்வாகம் ஒரு திட்டத்தை வைத்துள்ளது. ஏனெனில் ஏற்கனவே நிதீஷ் ராணா ஏற்கனவே ஒரு சீசன் கொல்கத்தா அணியை வழிநடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.