வெறும் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடிய மாயங்க் யாதவிற்கு 14 கோடி – எதற்காக தெரியுமா?

Mayank
- Advertisement -

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதன் முதற்கட்டமாக அடுத்த மாதம் 24 மற்றும் 25ஆம் தேதி சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் வீரர்களுக்கான மெகா ஏலம் நடத்தப்பட இருப்பதாக ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மாயங்க் யாதவிற்கு அடித்த ஜாக்பாட் :

இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்கள் அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று ஏற்கனவே அவர்கள் அக்டோபர் 31-ம் தேதி வரை கெடு விதித்துள்ளனர். இதன் காரணமாக அக்டோபர் 31-ம் தேதி மாலை 5 மணிக்குள் அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் லக்னோ அணி சார்பாக அந்த அணியின் கேப்டன் கே.எல் ராகுல் வெளியேற்றப்பட இருக்கிறார் என்றும் அவருக்கு பதிலாக புதிய கேப்டனை நியமிக்க அந்த அணி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் ஒவ்வொரு அணியும் ஆறு வீரரை தக்க வைக்கலாம் என்று கூறப்பட்ட வேளையில் அந்த அணி ரவி பிஸ்னாய், பூரான் மற்றும் மாயங்க் யாதவ் ஆகியோரை மட்டும் தக்க வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக முதல் வீரராக நிக்கோலஸ் பூரானை 18 கோடி ரூபாய்க்கும், மாயங்க் யாதவை 14 கோடிக்கும் தக்கவைக்கவும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி வெறும் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள மாயங்க் யாதவ் இந்திய அணிக்காக அறிமுகமாகிவிட்டதால் அவரை 14 கோடி ரூபாய்க்கு தக்கவைக்க அந்த அணி விருப்பப்படுவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் சர்வதேச போட்டியில் அறிமுகமாகாமல் இருந்திருந்தால் அவரை அன் கேப்டு வீரராக நான்கு கோடி ரூபாய்க்கு தக்க வைத்திருக்க முடியும். ஆனால் அவர் வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்று ஆட்டங்களிலும் விளையாடி உள்ளதால் அவர் சர்வதேச வீரராக கணக்கில் கொள்ளப்படுவார்.

இதையும் படிங்க : 2வது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் சுந்தர் விளையாடுவாரா? பயிற்சியாளர் கெளதம் கம்பீர் ஹிண்ட்

இதன் காரணமாகவே அவரது மதிப்பு உயர்ந்துள்ளது. இந்திய அணியின் அடுத்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக பார்க்கப்படும் அவரை ஏலத்தில் விட்டால் மீண்டும் எடுக்க முடியாது என்பதன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement