4 ஆவது போட்டி சூப்பர் ஓவர் வரை செல்ல காரணம் இதுதான் – இதனை கவனித்தீர்களா ?

Kohli Tim Southee IND vs NZ
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 3-0 என்று கைப்பற்றிய நிலையில் இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி வெலிங்டன் நகரில் நேற்று நடைபெற்றது.

Thakur

- Advertisement -

இந்த போட்டியிலும் இரு அணிகளும் 165 ரன்களை குவிக்க போட்டி கடந்த 3 ஆவது போட்டியை போல சூப்பர் ஓவர் வரை சென்றது. இந்த சூப்பர் ஓவரில் நியூசிலாந்து 13 ரன்கள் குவிக்க 14 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் ராகுல் மற்றும் கோலி ஆகியோர் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல 4-0 என்ற கணக்கில் இந்த தொடரில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி சூப்பர் ஓவரை செல்ல காரணம் யாதெனில் தாகூரின் சிறப்பான பந்துவீச்சு மட்டுமின்றி நியூசிலாந்து அணி வீரர்களின் சொதப்பலான பேட்டிங்கும் காரணமாக அமைந்தது. ஏனெனில் மூன்ரோ மற்றும் சைபர்ட் ஆகியோர் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கையில் நியூசிலாந்து அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் வெற்றிக்கு தேவையான ரன்களை எளிதாக எட்டி இருக்க முடியும். ஆனால் கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தேவையில்லாமல் நியூசிலாந்து வீரர்கள் சிலர் அர்த்தமற்ற ஷாட்டுகளை விளையாடினர்.

munro

அதிலும் குறிப்பாக டைலர் அந்த ஓவரின் முதல் பந்தில் தூக்கி அடித்து எளிதாக அவுட்டானார். மற்றும் சைபர்ட் ரன்அவுட் என்று இந்த சில காரணங்களினாலே அவர்களை சூப்பர் வரை போட்டி கொண்டு சென்றது. எளிதாக அடித்து இருக்க வேண்டி ரன்களை அவர்கள் எவ்வாறு கஷ்டத்திற்கு உள்ளாக்கினர் என்று தெரியவில்லை. மேலும் கடைசி ஓவரில் இரண்டாவது பந்தில் பவுண்டரி வந்தும் மீதி 4 பந்துகளில் 3 ரன்கள் அடிக்க முடியாமல் போனதற்கு காரணம் அவர்களின் அனுபவம் இன்மையே என்பது அவர்களது ஆட்டத்தின் மூலம் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement