WTC : இந்திய டெஸ்ட் அணியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை சேர்க்க என்ன காரணம் – விவரம் இதோ

Yashasvi Jaiswal
- Advertisement -

இந்தியாவில் நடைபெறும் வரும் நடப்பு 16-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் அணியின் துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இந்திய டெஸ்ட் அணியில் தற்போது இடம் கிடைத்துள்ளது. அதன்படி வரும் ஜூன் 7-11 வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் அவர் கூடுதல் துவக்க வீரராக இடம் பிடித்துள்ளார்.

Jaiswal

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த ருதுராஜ் கெய்க்வாட் தனது திருமணம் காரணமாக இந்திய அணியில் டெஸ்ட் அணியில் இருந்து வெளியேறியதால் அவருக்கு பதிலாக இந்திய டெஸ்ட் அணியில் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படி வாய்ப்பு அவருக்கு கிடைத்தாலும் ஜெய்ஸ்வாலுக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்க என்ன காரணங்கள் என்பது குறித்த முக்கியமான விடயங்களை இங்கு காணலாம்.

அதன்படி நடப்பு ஐ.பி.எல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய ஜெய்ஸ்வால் 1 சதம் மற்றும் 5 அரைசதம் என 48 ரன்கள் என்கிற சராசரியுடன் 163 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 625 ரன்கள் குவித்துள்ளார். அதோடு அன் கேப்புடு பிளேயராக ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் ஜெய்ஸ்வால் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Jaiswal 1

அதோடு இதுவரை 15 பர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ள அவர் 9 சதம் மற்றும் 2 அரைசதம் என 26 இன்னிங்ஸ்களில் 80.21 ரன்கள் சராசரியுடன் 1845 ரன்களை குவித்துள்ளார். மேலும் 32 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடுள்ள அவர் 53.96 ரன்கள் சராசரியுடன் 1511 ரன்களை குவித்துள்ளார். இதில் 5 சதம் மற்றும் 7 அரைசதங்கள் அடங்கும்.

- Advertisement -

இப்படி உள்ளூர் தொடர்களில் இவர் அசத்தியிருந்தாலும் வெளிநாடுகளில் இவருக்கு விளையாடிய அனுபவம் இருக்கிறதா? என்று பார்த்தால் அதிலும் அவர் நல்ல ரெக்கார்டை வைத்துள்ளார். அதிலும் குறிப்பாக தென்னாபிரிக்க மண்ணில் இதுவரை அவர் 12 போட்டிகளில் விளையாடி 75.25 ரன்கள் சராசரியுடன் 602 ரன்களை குவித்துள்ளார். அதில் 1 சதம் மற்றும் 6 அரைசதங்கள் அடங்கும்.

இதையும் படிங்க : சச்சின் 10, தோனி 7 வரிசையில் தனது ஜெர்ஸியில் 18 நம்பர் வந்தது எப்படி? உணர்ச்சிகரமான பின்னணியை பகிர்ந்த விராட் கோலி

அதோடு இங்கிலாந்து மண்ணிலும் விளையாடியுள்ள அனுபவமுடைய அவர் அங்கு 7 போட்டிகளில் விளையாடி 42 ரன்கள் சராசரியுடன் 294 ரன்களை குவித்துள்ளார். இங்கிலாந்து மண்ணில் அதிகபட்சமாக 78 ரன்களையும், அங்கு அவர் 4 அரைசதங்களையும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement