சச்சின் 10, தோனி 7 வரிசையில் தனது ஜெர்ஸியில் 18 நம்பர் வந்தது எப்படி? உணர்ச்சிகரமான பின்னணியை பகிர்ந்த விராட் கோலி

Kohli
- Advertisement -

டெல்லியை சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி இந்தியாவுக்காக விளையாடும் லட்சியத்துடன் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு அண்டர்-19 அணியின் கேப்டனாக முன்னேறி மலேசியாவில் நடைபெற்ற 2008 உலகக் கோப்பையை வென்று கொடுத்து சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆரம்பக் காலங்களில் தடுமாறினாலும் நாளடைவில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிலையான இடத்தை பிடித்த அவர் 2013இல் சச்சின் டெண்டுல்கர் ஓய்வுக்கு பின் அவரது இடத்தில் அவரைப் போலவே ரன் மெஷினாக உலகில் அனைத்து இடங்களிலும் அனைத்து தரமான பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு 25000க்கும் மேற்பட்ட ரன்களையும் 75 சதங்களை அடித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.

குறிப்பாக சச்சின் படைத்த சாதனைகளை குறைந்த இன்னிங்ஸில் வேகமாக உடைத்து வரும் அவர் 100 சதங்களை தாண்டி புதிய உலக சாதனைகள் படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கேப்டனாக உலக கோப்பையை வெல்லவில்லை என்றாலும் வெளிநாடுகளில் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக ஒரு தொடரை வென்ற அவர் வெற்றிகரமான ஆசிய டெஸ்ட் கேப்டனாக சாதனை படைத்துள்ளார். அப்படி இந்திய கிரிக்கெட்டின் மகத்தான வீரராக செயல்பட்டு கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள அவர் பல இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாகவும் திகழ்கிறார்.

- Advertisement -

ஜெர்ஸி நம்பர்:
பொதுவாக அவரைப் போன்ற நட்சத்திர விளையாட்டு வீரர்கள் அணிந்து விளையாடும் ஜெர்சியில் இருக்கும் நம்பர் ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. குறிப்பாக சச்சின் டெண்டுல்கர், தோனி ஆகியோரின் ஜெர்சியில் இருக்கும் 10, 7 ஆகிய நம்பர்களை அவர்களுடைய ரசிகர்கள் தங்களது பெயருடனும் இணைத்து சமூகவலைதளங்களில் பயன்படுத்துவதை அசால்டாக பார்க்கலாம். அதே போலவே நவீன கிரிக்கெட்டின் நாயகன் விராட் கோலியின் ஜெர்சியில் உள்ள 18 நம்பரும் ரசிகர்களிடம் மிகவும் புகழ்பெற்றுள்ளது. இந்நிலையில் அண்டர்-19 அளவில் விளையாடும் போது அந்த நம்பர் தாமாக வந்ததே தவிர கேட்டு வாங்கவில்லை என்று விராட் கோலி கூறியுள்ளார்.

இருப்பினும் 2008 ஆகஸ்ட் 18ஆம் தேதி இந்தியாவுக்காக அறிமுகமானது, 2006 டிசம்பர் 18ஆம் தேதி தன்னுடைய தந்தை இயற்கையை எழுதியது உட்பட பல மறக்க முடியாத நிகழ்வுகள் இயற்கையாகவே அந்த நம்பருடன் இணைந்து வருவதால் அதை மகிழ்ச்சியுடன் பயன்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அதில் குறிப்பாக தனது தந்தையை இழந்த அடுத்த நாளன்று ரஞ்சிக் கோப்பையில் விளையாடியது என்று தெரிவிக்கும் விராட் கோலி இது பற்றிய சமீபத்தில் பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“18 நம்பரை நான் எப்போதும் கேட்டதில்லை. இருப்பினும் அண்டர்-19 அணியில் முதல் முறையாக விளையாடிய போது அந்த நம்பருடைய ஜெர்சி தான் எனக்கு கிடைத்தது. அந்த சமயத்தில் என்னுடைய வயது 18 ஆகும். அதன் பின் இந்தியாவுக்காக நான் ஆகஸ்ட் 18ஆம் தேதியன்று அறிமுகமானேன். துரதிஷ்டவசமாக அதற்கு முந்தைய சில வருடங்களுக்கு முன் எனது தந்தை 18ஆம் தேதி இயற்கையை எய்தினார். எனவே இனிமேலும் அது எனக்கு வெறும் நம்பர் மட்டுமல்ல. அது என்னுடன் இயற்கையாகவே ஒட்டிக் கொண்டுள்ளது”

“அத்துடன் எனது தந்தை இறந்த நாள் இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. அது என்னுடைய வாழ்வில் மிகவும் கடினமான நேரமாகும். ஆனால் அடுத்த நாள் காலையில் விளையாடுவதற்காக நான் எடுத்த முடிவு இயல்பாகவே வந்தது. அந்த நாள் காலையில் நான் எனது டெல்லி அணியின் பயிற்சியாளரை அழைத்து இன்று விளையாடப் போவதாக சொன்னேன். ஏனெனில் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு போட்டியை முடிக்காமல் விட்டால் அது எனக்கு பாவமாகிவிடும். அது என்னை ஒரு மனிதனாக மாற்றிய தருணம். மொத்தத்தில் என் வாழ்க்கையில் இந்த விளையாட்டில் இருக்கும் முக்கியத்துவம் மிகவும் அதிகமாகும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:CSK vs GT : சுப்மன் கில்லை அவுட்டாக்க அந்த ஒரே சிஎஸ்கே பவுலரால் மட்டுமே முடியும் – ஆனா நடக்குமா? முக்கிய புள்ளிவிவரம் இதோ

அப்படி வாழ்வின் அந்த மோசமான நேரத்திலும் விளையாடிய விராட் கோலி 90 ரன்கள் குவித்தது டெல்லி அணி ஃபாலோ ஆன் பெறுவதை தவிர்க்க உதவியது குறிப்பிடத்தக்கது.

Advertisement