CSK vs GT : சுப்மன் கில்லை அவுட்டாக்க அந்த ஒரே சிஎஸ்கே பவுலரால் மட்டுமே முடியும் – ஆனா நடக்குமா? முக்கிய புள்ளிவிவரம் இதோ

- Advertisement -

கடந்த 2 மாதங்களாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்வித்து வந்த ஐபிஎல் 2023 டி20 தொடரின் மாபெரும் இறுதி போட்டி மே 28ஆம் தேதி அகமதாபாத் நகரில் துவங்கியது. அதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் போதிய வெற்றிகளைப் பெற்ற முன்னாள் சாம்பியன் சென்னை மற்றும் நடப்பு சாம்பியன் குஜராத் ஆகிய அணிகள் மோதின. இருப்பினும் மழையால் முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட அந்த போட்டி மீண்டும் இன்று ரிசர்வ் நாளில் இரவு 7.30 மணிக்கு துவங்குகிறது. அந்த போட்டியில் சென்னை 5வது கோப்பையை வெல்லுமா அல்லது குஜராத் 2வது கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

- Advertisement -

இப்போட்டியில் 2 அணிகளையும் பொதுவாக ஒப்பிடும் போது சென்னையை விட ஷமி, மோஹித் சர்மா, ரசித் கான் என ஊதா தொப்பி பட்டியலில் டாப் 3 இடங்களை பிடித்துள்ள பவுலர்களை கொண்ட குஜராத் அணியின் பேட்டிங் வரிசையிலும் சஹா, சாய் சுதர்சன், கேப்டன் பாண்டியா, டேவிட் மில்லர், ராகுல் திவாடியா என நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்களால் வலுவாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக சமீப காலங்களாக சர்வதேச அளவிலேயே அடுத்தடுத்த சதங்களை எடுத்து அட்டகாசமான ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில் 851* ரன்களை விளாசி அதிக ரன்கள் அடித்த வீரராக ஆரஞ்சு தொப்பியை வென்று அச்சுறுத்தலை கொடுக்கிறார்.

ஒரே பவுலர்:
அத்துடன் கடந்த 2 போட்டிகளில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இடம் வகிக்கும் பெங்களூரு மற்றும் மும்பையை இத்தொடரிலிருந்து சதமடித்து வெளியேற்றிய அவர் ஃபைனல் நடைபெறும் அகமதாபாத் மைதானத்தில் கடைசியாக நடந்த 2 போட்டிகளிலும் அடுத்தடுத்த சதங்களை விளாசி உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். அதனால் இந்த ஃபைனலில் அவருடைய விக்கெட்டை எடுக்காமல் சென்னை கோப்பை வெல்ல முடியாது என்று சச்சின் முதல் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் வரை அனைவருமே ஒப்புக்கொண்டு பாராட்டியுள்ளனர்.

எடுத்துக்காட்டாக மும்பைக்கு எதிரான போட்டியில் வெறும் 30 ரன்களில் கொடுத்த கேட்ச் தவற விட்டதை பயன்படுத்திய அவர் 129 ரன்கள் குவித்து தோல்வியை பரிசளித்தார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவரை ஆரம்பத்திலேயே அவுட்டாக்குவதே வெற்றிக்கான சிறந்த வழியாகும். மறுபுறம் சென்னை அணியின் அனுபவ பவுலராக இருக்கும் தீபக் சஹர் பொதுவாகவே புதிய பந்தை ஸ்விங் செய்து விக்கெட்டுகளை எடுப்பதில் திறமை மிக்கவர் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

- Advertisement -

அப்படிப்பட்ட அவர் 2022 சீசனில் முதல் முறையாக சுப்மன் கில்லுக்கு எதிராக 2 போட்டிகளில் 18 பந்துகளை வீசி வெறும் 21 ரன்களை மட்டுமே கொடுத்துள்ளார். அதில் 4 பவுண்டரிகளை மட்டும் அடித்த கில் 2 முறை அவுட்டாகியுள்ளார். அதே போல இந்த சீசனில் அவருடைய 14 பந்துகளை எதிர்கொண்ட சுப்மன் கில் அதில் 1 பவுண்டரி 1 சிக்சர் மட்டுமே அடித்து 17 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அந்த 14 பந்துகளில் முக்கியமான குவாலிபயர் 2 போட்டியில் இதர பவுலர்களுக்கு எதிராக சுப்மன் கில் 42 (38) ரன்கள் எடுத்து அச்சுறுத்திய போது தீபக் சஹர் தான் அவுட்டாக்கினார்.

Deepak-Chahar

அந்த வகையில் மொத்தமாக இதுவரை ஐபிஎல் தொடரில் அவருக்கு எதிராக 32 பந்துகளை எதிர்கொண்டுள்ள சுப்மன் கில் 38 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். ஆனால் தீபக் சஹர் 3 முறை அவுட்டாக்கியுள்ளார். எனவே இந்த போட்டியில் கில்லை முன்கூட்டியே அவுட்டாக்கி தடுத்து நிறுத்தும் திறமை தீபக் சாஹாரிடம் இருக்கிறது என்று சொல்லலாம்.

இதையும் படிங்க:IPL 2023 : இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றப்போவது யார்? – வாசிம் அக்ரம் கணிப்பு

குறிப்பாக இன்றைய ஃபைனல் மேகமூட்டத்துடன் கூடிய வானிலையுடன் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஈரப்பதமான சூழ்நிலை ஸ்விங் பந்து வீச்சுக்கு நன்றாகவே கை கொடுக்கும். எனவே அதை பயன்படுத்தி சுப்மன் கில்லை முன்னதாகவே தீபக் சஹார் அவுட்டாக்கி சென்னையின் வெற்றிக்கு வித்திடுவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement