IPL 2023 : இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றப்போவது யார்? – வாசிம் அக்ரம் கணிப்பு

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கும் இடையேயான நடப்பு 16-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியானது நேற்று மே 28-ஆம் தேதி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெறயிருந்தது. ஆனால் இந்த போட்டியானது மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. அதோடு நேற்று கைவிடப்பட்ட இந்த போட்டியானது ரிசர்வ் டே வான இன்று நடைபெறவுள்ளது.

CSK vs GT

- Advertisement -

பலம் வாய்ந்த இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த மாபெரும் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போவது யார்? என்ற கணிப்புகளை பல்வேறு முன்னாள் வீரர்களும் வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில் இந்த இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றப்போவது யார்? என்ற தனது கணிப்பினை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். அந்தவகையில் வாசிம் அக்ரம் கூறியதாவது :

GT vs CSK MS Dhoni

இந்த தொடர் ஆரம்பிக்கும் போதே நான் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் நிச்சயம் பிளே ஆப் சுற்றின் டாப் 4 அணிகளில் தகுதிபெறும் என்று நினைத்தேன். குஜராத் அணி துவக்க வீரர் சுப்மன் கில் மற்றும் ஹார்டிக் பாண்டியாவையே அதிகம் நம்பியுள்ளது.

- Advertisement -

அதேவேளையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஏற்கனவே 10 முறை ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது. துவக்கத்தில் விக்கெட்டுகள் விழுந்தாலும் இன்னிங்க்ஸை எவ்வாறு கட்டமைப்பது என்பது சி.எஸ்.கே அணிக்கு நன்றாக தெரியும். மேலும் பதட்டமான சூழ்நிலையிலும் எவ்வாறு அமைதியாக போட்டியை கையாள்வது என்பது சி.எஸ்.கே அணிக்கு தெரியும்.

இதையும் படிங்க : CSK vs GT : இன்னும் அதை மறக்க முடியல – ரிசர்வ் டே நினைச்சாலே பயமா இருக்கு, சிஎஸ்கே ரசிகர்கள் கவலை – காரணம் இதோ

இந்த இறுதிப்போட்டி குறித்து அனைவருக்கும் வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரை இந்த போட்டியில் வெற்றிபெற சி.எஸ்.கே அணிக்கு 60% வாய்ப்பும், குஜராத் அணிக்கு 40% வாய்ப்பும் இருப்பதாக வாசிம் அக்ரம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement