கேன் வில்லியம்சனை பிளேயிங் லெவனில் ஆட வைக்காததற்கு இதுவே காரணம் – சன்ரைசர்ஸ் கோச் வெளிப்படை

Williamson

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் 14வது சீசனின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. இப்போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி தோல்வியைத் தழுவியது. இப்போட்டியில் ஐதராபாத் அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை குறித்த விமர்சனங்கள் எழுந்துள்ளது.

kkr

அதிலும் முக்கியமாக நியூஸிலாந்தின் நட்சத்திர ஆட்டக்காரர் கேன் வில்லியம்சனுக்கு ஐதராபாத் அணியில் இடம் கொடுக்காததை விமர்சித்து ஹைதராபாத் அணியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோபத்துடன் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஐபிஎல் விதிமுறைகளின்படி ஒரு அணியில் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே ஆட முடியும். அவ்விதிமுறைப்படி ஐதராபாத் அணியில் டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ, ரஷித் கான் மற்றும் முகமது நபி ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்கள் விளையாடினர்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ஹைதராபாத் அணிக்கு எப்போதெல்லாம் மிடில் ஆடர் சொதப்புகிறதோ அப்போதெல்லாம் ஹைதராபாத் அணிக்கு மிடில் ஆர்டரில் களம் இறங்கி அந்த அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்ற கேன் வில்லியம்சனுக்கு இடம் தரவில்லை. அணி நிர்வாகத்தின் இந்த முடிவானது பல விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

Kane-Williamson

இது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் டிரேவர் பெய்லிஸ் கூறுகையில் : கேன் வில்லியம்சன் ஒரு முழு போட்டியில் விளையாடுவதற்கான உடல் தகுதியை இன்னும் பெறவில்லை என்றும் அவர் அதற்கு தயாராவதற்கு இன்னும் கொஞ்சம் நேரம் தேவை, வலைப்பயிற்சியில் இன்னும் சற்று நேரம் அதிகமாக பயிற்சி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

- Advertisement -

williamson

மேலும் நடந்து முடிந்த இங்கிலாந்து இந்தியா தொடரில் ஜானி பேர்ஸ்டோ தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவருக்கு அணியில் இடம் கிடைத்ததாகவும் வில்லியம்சன் முழு உடல் தகுதி பெற்றால் அணியில் இடம் கிடைக்கும் என்று பதில் கூறியுள்ளார்.