ஷர்துல் தாகூரின் அதிரடியான பேட்டிங்குக்கு இவர் கொடுத்த அட்வைஸ் தான் காரணமாம் – விவரம் இதோ

Thakur
- Advertisement -

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்து உள்ளது. இதில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு முறை வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் இருக்கிறது. கடைசியாக நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிந்தது. தற்போது நான்காவது டெஸ்ட் போட்டி கடந்த 15 தேதி முதல் காபா மைதானத்தில் தொடங்கி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே டெஸ்ட் தொடரை கைபற்றும்.

Thakur

- Advertisement -

இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிஸ்சில் 369 ரன்கள் குவித்தது. இந்திய அணியும் தனது முதல் இன்னிஸ்சில் 336 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 33 ரன்கள் முன்னிலை வகித்து தனது இரண்டாவது இன்னிஸ்சில் 294 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 328 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. நான்காவது நாள் முடிவில் இந்திய அணி 1.5 ஓவர்கள் எதிர்கொண்டு 4 ரன்கள் மட்டும் குவித்து விக்கெட் இழக்காமல் விளையாடி வருகின்றனர்.

இந்த போட்டியில் தமிழக வீரர் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் மூத்த வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இடம்பிடித்தார்கள். இதில் சுந்தர் மற்றும் தாகூர் ஆகியோர் பேட்டிங் மற்றும் பந்துவீசு என அனைத்திலும் சிறப்பாக விளையாடினர். இதில் நடராஜன் மற்றும் சுந்தர் பந்துவீச்சில் தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்கள்.

thakur 2

இது ஒருபக்கம் இருக்க பேட்டிங்கில் ஆல்ரவுண்டர் சுந்தர் மற்றும் பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர் இருவரும் அரைசதம் விளாசினர். இந்நிலையில் பந்துவீச்சாளரான ஷர்துல் தாகூர் அரைசதம் விளாசியது அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது தாகூர் சிறப்பாக விளையாட இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தான் காரணம் என்று பேசப்பட்டு வருகிறது. தாகூர் பேட்டிங் செய்ய கிளம்பு முன் ரவி சாஸ்திரி :

Thakur 1

நீ ஆஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்பட்டால் அவர்களுக்கு உன்னை பிடித்துவிடும். இது உனக்கு மேலும் பல வாய்ப்புகளை பெற்று தரும் என்று கூறியுள்ளார். இதனை தெளிவாக உணர்ந்து கொண்ட ஷர்துல் தாகூர் பேட்டிங்கில் கலக்கினார். இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement