டி20 உலகக்கோப்பை : முகமது ஷமி ஸ்டான்ட் பை வீரராக சேர்க்கப்பட இதுவே காரணம் – வெளியான தகவல்

shami
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணியானது நேற்று இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ-யின் மூலம் அதிகாரவபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள இந்த உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. ஆசிய கோப்பை தொடருக்கு தேர்வான பெரும்பாலான வீரர்கள் அந்த அணியில் இடம் பெற்றுள்ளனர்.

Bhuvneshwar-Kumar-1

- Advertisement -

மிக முக்கிய மாற்றங்களாக காயத்தால் ஆசியக் கோப்பையை தவறவிட்ட ஹர்ஷல் பட்டேல் மற்றும் பும்ரா ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். அதேபோன்று காயமடைந்த ஜடேஜாவிற்கு பதிலாக அச்சர் பட்டேல் சேர்க்கப்பட்டுள்ளார். அவர்களை தவிர்த்து இந்திய அணியில் வேறு எந்த புதிய மாற்றமும் இல்லை.

வேகப்பந்து வீச்சாளர்களாக புவனேஸ்வர் குமார், பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முகமது ஷமிக்கு முதன்மை அணியில் வாய்ப்பு கொடுக்காமல் ஸ்டாண்ட் பை வீரராக இந்திய அணி அவரை தேர்வு செய்துள்ளது.

Shami

இந்நிலையில் முகமது ஷமியை கூடுதல் வீரராக அணியில் சேர்க்க என்ன காரணம் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி வெளியான தகவலில் 5 வேகப்பந்து வீச்சாளர்களுடன் தான் உலகக்கோப்பை தொடருக்கு செல்லலாம் என்று தேர்வுக்குழு முடிவு எடுத்தது.

- Advertisement -

ஆனால் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் வெயில் காலம் என்பதினால் சுழற்ப்பந்து வீச்சுக்கு ஆடுகளங்கள் சற்று சாதகமாக அமையும் என்பதனால் டிராவிட் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரே அஷ்வின் பக்கம் சாய்ந்துள்ளனர். இதனாலே 15 பேர் கொண்ட அணியில் அஷ்வினும், கூடுதல் வீரராக முகமது ஷமி கூடுதல் வீரராகவும் சேர்க்கப்பட்ட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : கிரிக்கெட்டை தாண்டி மக்களுக்கு நன்மை செய்யும் தொண்டு நிறுவங்களை நடத்தும் 6 இந்திய வீரர்கள் – வித்யாச பதிவு

இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்களாக யுஸ்வேந்திர சாஹல், அஷ்வின் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் முதன்மை அணியில் இருக்கும் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களில் யாரேனும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் முகமது ஷமி நேரடியாக அணியில் இணைவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement