
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக மூன்று விதமான ஐசிசி கோப்பைகளும் பெற்றுக் கொடுத்த ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றவர். அதோடு திறமை இருக்கும் வீரர்களுக்கு நிறைய வாய்ப்பளித்து அவர்களை முன்னேற்றுவதிலும் தோனி பெரும் பங்காற்றுள்ளார். குறிப்பாக ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா, ரெய்னா போன்ற வீரர்களின் கரியரின் உயர்வுக்கு தோனியின் ஆதரவு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்பட்டது.
அந்த வகையில் இந்திய அணிக்காக மிகச்சிறப்பான கேப்டனாக செயல்பட்ட மகேந்திர சிங் தோனி மூன்று வகையான ஐசிசி கோப்பையை கைப்பற்றி கொடுத்த பின்பு சாதாரண வீரராக இந்திய அணியில் தொடர்ந்தார். கடந்து 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையை வெற்றி பெற்றுவிட்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்திய அணி அந்த தொடரில் அரையிறுதி போட்டியோடு வெளியேறியது. அதன் பின்னர் கிட்டத்தட்ட 9 மாதங்கள் இந்திய அணியில் இடம் பிடிக்காமல் இருந்து வந்த அவர் 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஓய்வை அறிவித்து ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தினார். மேலும் அவர் தனது ஓய்வு குறித்து வெளியிட்ட அந்த பதிவில் :
உங்கள் அன்பிற்கு நன்றி 1929 மணி நேரத்திற்கு முன்பு தொடங்கிய என்னுடைய பயணம் தற்போதுடன் ஓய்வு பெறுவதாக கருதுங்கள் என்று பதிவிட்டு இருந்தார். தோனி ஓய்வு அறிவித்த சில நிமிடங்களிலேயே சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வு முடிவை அறிவித்து தோனியின் மீதுள்ள விசுவாசத்தை காட்டியிருந்தார்.
இப்படி திடீரென தோனி ஓய்வு பெற்ற சில நிமிடங்களிலேயே ரெய்னா ஓய்வுபெற ஒரு சுவாரசியமான காரணமும் உள்ளது. அது குறித்து தகவலை தான் இந்த பதிவில் காண உள்ளோம். அதன்படி ரெய்னா பகிர்ந்த கருத்தில் : நாங்கள் ஏற்கனவே ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஓய்வுபெற முடிவு செய்தோம்.
இதையும் படிங்க : அவங்களோட பணம் முக்கியம்.. ரசிகர்களுக்காகத் தான் இந்தியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்தல.. ஜெய் ஷா
ஏனெனில் தோனியின் ஜெர்சி எண் 7 என்னுடைய ஜெர்சி எண் 3 இரண்டையும் சேர்த்தால் 73 ஆகஸ்ட் 15-ஆம் தேதி 2020 அன்று இந்தியா சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் நிறைவடைந்ததால் என்னை பொறுத்தவரை நாங்கள் இருவரும் ஓய்வுபெற இதை விட சிறந்த நாள் இருக்க முடியாது என்றே ஓய்வை அறிவித்ததாக ரெய்னா பகிர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.