ஏற்கனவே 2 மேட்ச் சேப்பாக்கத்தில் களமிறங்காத தோனி நேற்று வெற்றிக்கு 3 ரன்கள் மட்டுமே இருந்த நிலையில் – களமிறங்கியது ஏன்?

MSD
- Advertisement -

கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனிக்கு இந்த சீசனே கடைசி தொடராக பார்க்கப்படுகிறது. தற்போது 42 வயதாகும் தோனி இந்த ஆண்டுடன் ஓய்வை அறிவிப்பார் என்பதனால் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது.

இந்த ஆண்டு துவங்கிய ஐபிஎல் தொடருக்கு சில நாட்கள் முன்னதாக கேப்டன் பதவியிலிருந்து விலகிய தோனி முழுநேர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடி வருகிறார். இந்த தொடரே தோனி விளையாடும் கடைசி தொடராக பார்க்கப்படும் வேளையில் சென்னை அணி விளையாடும் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

- Advertisement -

அதோடு தோனியின் ஆட்டத்தை நேரில் காண ரசிகர்கள் மைதானத்திற்கு படையெடுத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக சிஎஸ்கே அணியின் கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் தோனி பேட்டிங் செய்வதை ஒருமுறையாவது நேரில் காண வேண்டும் என்பதற்காகவே ரசிகர்கள் நேரில் மைதானத்திற்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தொடரில் இதுவரை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெற்று இருந்த வேளையில் முதல் இரண்டு போட்டிகளிலும் களமிறங்காத தோனி நேற்று கொல்கத்தா அணிக்கெதிராக நடைபெற்ற லீக் போட்டியில் ஐந்தாவது வீரராக களமிறங்கி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

- Advertisement -

குறிப்பாக இந்த போட்டியின் வெற்றிக்கு மூன்று ரன்கள் மட்டுமே தேவை என்கிற நிலையில் ரவீந்திர ஜடேஜா தான் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் திடீரென தோனி களத்திற்குள் வந்தார். இப்படி தோனி களத்திற்கு வர காரணம் யாதெனில் :

இதையும் படிங்க : பிளான் போட்டதே அவர் தான்.. தோனிக்காக சிஎஸ்கே ரசிகர்களை ஃப்ராங் செய்த ஜடேஜா.. தேஷ்பாண்டே பேட்டி

தோனி பேட்டிங் செய்ய களமிறங்கும் அந்த ஒரு தருணத்திற்கு கிடைக்கும் வரவேற்பு மற்றும் எப்படியாவது தோனி ஒரு பந்தாவது பேட்டிங் செய்வதை பார்த்து விட வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்காகவே கடைசி நொடியில் பேட்டிங் செய்ய களமிறங்கினார். ரசிகர்களின் ஆசைக்காகவும், அன்பிற்காகவும் தான் நேற்று தோனி பேட்டிங் செய்ய களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement