IND vs RSA : பும்ராவிற்கு பதிலாக முகமது சிராஜை தேர்வு செய்ய என்ன காரணம்? – விவரம் இதோ

Siraj
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்பிரீத் பும்ரா எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக இந்தியாவில் தற்போது நடைபெற்ற வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் விளையாட இருந்தார். ஆனால் செப்டம்பர் 28-ஆம் தேதி திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் அவர் விளையாடவில்லை. ஆனாலும் இந்த தொடரின் எஞ்சியிருந்த இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் விளையாடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

Bumrah 1

- Advertisement -

ஆனால் பயிற்சியின் போது முதுகில் ஏற்பட்ட அசவுகரியத்தை உணர்ந்த அவர் அணி மருத்துவரிடம் தனது அசவுகரியத்தை பற்றி பகிர்ந்தார். பின்னர் அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையின் முடிவில் முதுகுப் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதன் காரணமாக அவர் இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகுவார் என்றும் அது மட்டும் இன்றி எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரிலும் அவர் விளையாட மாட்டார் என்ற தகவல் நேற்று வெளியாகிறது.

அவரின் இந்த காயம் தற்போது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில் பும்ரா தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று அங்கு பயிற்சி மற்றும் சிகிச்சை மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மீதமுள்ள இரண்டு டி20 போட்டிகளுக்கான மாற்றுவீரரை இந்திய அணியின் நிர்வாகமான பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி இந்திய அணியைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் எஞ்சியுள்ள போட்டிகளில் பும்ராவிற்கு பதிலாக விளையாடுவார் என்று தெரிவித்துள்ளது.

siraj

கடந்த 2017 ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான சிராஜ் இதுவரை 5 போட்டிகளில் மட்டுமே விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பும்ராவின் மிகப்பெரிய இடத்திற்கு மாற்று வீரராக சிராஜை கொண்டுவர என்ன காரணம் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தலான பார்மில் இருக்கும் முகமது சிராஜ் சரியான வேகத்தில் லைன் மற்றும் லெந்தினை கணித்து பந்து வீசக்கூடியவர். அதோடு டெத் ஓவர்களிலும் மிகச் சிறப்பாக பந்து வீசும் அவர் பெங்களூர் அணியால் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தக்க வைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதோடு இந்த டி20 தொடரில் அவர் சேர்க்கப்பட முக்கிய காரணம் யாதெனில் : டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெறாத அவர் இங்கிலாந்து சென்று கவுண்டி அணிக்காக மிகச் சிறப்பான பந்துவீச்சை இம்மாத துவக்கத்தில் அளித்திருந்தார். அதோடு அவர் கவுண்டி கிரிக்கெட்டில் அறிமுகமான போட்டியிலும் ஐந்து விக்கெட் வீழ்த்தி அசத்தியிருந்தார். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து ஆடுகளத்தில் அவரது பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்ததன் காரணமாகவே அவர் தற்போது இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க :

மேலும் வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் யார்க்கர், ஷார்ட் பால்ஸ், ஸ்லோவர் பால் என பல்வேறு வெரைட்டியுடன் பந்து வீசக்கூடியவர். அதன் காரணமாகவும் அவர் அணியில் இடம் பெற்றுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. முகமது சிராஜின் இந்த சேர்க்கை மூலம் எதிர்வரும் டி20 உலக கோப்பை அணியில் பும்ராவின் இடத்தை பிடிக்கும் வீரர்களின் போட்டியில் அவரும் உள்ளது தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement