
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று துவங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியானது பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து அந்த அணி தற்போது அவர்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்? என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் குறிப்பிட்ட சில மாற்றம் மட்டுமே நிகழ்ந்துள்ளன. அந்த வகையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் மீண்டும் பிளேயிங் லெவனுக்குள் திரும்பியுள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஏனெனில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடாத அவர் தற்போது மீண்டும் இந்திய அணி டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார். அதிலும் குறிப்பாக அக்சர் பட்டேல் ஒரு சிறப்பான ஆல்ரவுண்டராக இருந்தும் அவரைத் தாண்டி குல்தீப் யாதவ் இடம்பெற காரணம் என்ன? என்பது குறித்த கேள்வியும் எழுந்துள்ளது. அதற்கான சில விளக்கங்களை இங்கு காணலாம்.
அந்த வகையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஏற்கனவே ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், நிதீஷ் குமார் ரெட்டி ஆகியோர் பேட்டிங் தெரிந்த பந்துவீச்சாளர்கள் இருப்பதால் ஒரு முழுநேர சுழற்பந்து வீச்சாளரை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்திற்காக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
அதுமட்டுமின்றி நடைபெற்று முடிந்த 2025 ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சார்பாக 17 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் அந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராகவும் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார். இதன் காரணமாக அவரது திறமைக்கு ஒரு பரிசாகவும் இந்த போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கலாம்.
அதேபோன்று போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சற்று சாதகமாக இருக்கும் என்பதாலும் குல்தீப் யாதவின் பந்துவிச்சை பேட்ஸ்மேன்கள் எளிதில் கணிக்க முடியாது என்பதற்காகவும் இந்த வாய்ப்பினை தந்திருக்கலாம் என்று தெரிகிறது. கடந்த பல தொடர்களாகவே டெஸ்ட் அணியில் வாய்ப்புக்காக காத்திருந்த அவருக்கு இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டது சரிதான் என்று ஒரு சிலர் கூறி வருகின்றார்.
இதையும் படிங்க : அனுபவமில்லாத வெ.இ அணிக்கு எதிராக இத்தனை பவுலர்ஸ் எதுக்கு? அவரை சேர்த்திருக்கலாம் – ரசிகர்கள் கருத்து
ஏனெனில் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே மாதிரி வீரர்கள் அதாவது இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள். அவர்கள் இருவருமே ஒரேமாதிரி பேட்டிங் ஸ்டைல் மற்றும் பந்துவீச்சு ஸ்டைல் உடையவர்கள் ஆனால் மணிக்கட்டை பயன்படுத்தி பந்துவீசும் ஒரு வித்தியாசமான பவுலராக குல்தீப் யாதவ் இருப்பதால் அவருக்கு வாய்ப்பு கொடுத்தது சரிதான் என்றும் சிலர் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.