IND vs BAN : குல்தீப் யாதவை நீக்கிவிட்டு ஜெய்தேவ் உனட்கட்டை அணியில் சேர்க்க – காரணம் இதுதானாம்

Unadkat-and-Kuldeep
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியானது இன்று டிசம்பர் 22-ஆம் தேதி டாக்கா மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் இந்திய அணியில் ஒரு முக்கிய மாற்றமாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளரான ஜெயதேவ் உனட்கட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Unadkat

- Advertisement -

கடந்த 2010-ஆவது ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான உனட்கட் அந்தப் போட்டியில் விக்கெட்டை வீழ்த்த தவறினார். அதனை தொடர்ந்து தற்போது 12 ஆண்டுகளாக தனது இரண்டாவது போட்டிக்காக காத்திருந்த அவர் இடையில் 118 டெஸ்ட் போட்டிகளை தவறவிட்டு தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் முதல் போட்டியின் போது பேட்டிங்கில் 40 ரன்களையும், பந்துவீச்சில் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்திய குல்தீப் யாதவ் அணியிலிருந்து நீக்கப்பட்டது பெருமளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் முதல் போட்டியில் அவர் ஆட்டநாயகன் விருதினை வென்றும் இரண்டாவது போட்டியில் அவர் ஏன் அணியில் இருந்து நீக்கப்பட்டார்? என்ற கேள்வியே அதிக அளவில் எழுந்துள்ளது.

Kuldeep-Yadav

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து டாஸிற்கு பிறகு பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் கூறுகையில் : இந்த போட்டிக்கான மைதானத்தில் புற்கள் சற்று அதிகமாக இருப்பதினால் வேகப்பந்துவீச்சு மற்றும் சுழற்பந்து வீச்சு என இரண்டுக்குமே ஆடுகளம் சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். முதல் இன்னிங்ஸில் நாங்கள் சிறப்பாக பந்துவீசி விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியது அவசியம்.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியில் நாங்கள் ஒரு மாற்றத்தை செய்துள்ளோம். இந்த போட்டியில் துர்திஷ்ட வசமாக குல்தீப் யாதவ் விளையாடவில்லை. இது ஒரு கடினமான முடிவு தான் இருந்தாலும் நீண்ட நாட்களாக தனது வாய்ப்புக்காக காத்திருக்கும் உனட்கட்டிற்கு வாய்ப்பை வழங்கியாக வேண்டும் அதற்காகவே அவரை அணியில் இணைத்துள்ளோம் என்று கே.எல் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : IND vs BAN : 2 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஒரு மாற்றம் – யாரை நீக்கியிருக்காங்க பாருங்க

நிச்சயம் ஜெய்தேவ் உனட்கட்டை இந்திய அணியில் இணைத்தது ஒரு நல்ல முடிவு தான் என்றாலும் கடந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதினை வென்ற குல்தீப் யாதவை நீக்கிவிட்டு அவரை சேர்த்தது சற்று வருத்தமான விடயமாகவும் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement