4 விக்கெட் எடுத்த இளம்வீரரை தாண்டி 1 விக்கெட் எடுத்த ஹேசல்வுட்டுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கியது ஏன்?

Rasikh salam dar and Hazlewood
- Advertisement -

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 23-வது லீக் போட்டியில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணியை எளிதாக வீழ்த்தி இந்த நடப்பு 2026 ஐபிஎல் தொடரின் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. இந்த போட்டியில் 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை பெங்களூரு அணி 15.1 ஓவர்களிலேயே எளிதாக எட்டி அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது.

ஜோஷ் ஹேசல்வுட்டுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கியது ஏன்? :

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து ஆட்டநாயகன் விருது ஜோஷ் ஹேசல்வுட்டுக்கு வழங்கப்பட்டது ஏன்? என்பது தான் தற்போது பலரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் நேற்றைய போட்டியின் போது ஆர்.சி.பி அணி சார்பாக மிகச்சிறப்பாக பந்துவீசிய ராசிக் சலாம் தார் 4 ஓவர்கள் பந்துவீசி 24 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேபோன்று புவனேஷ்வர் குமாரும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

- Advertisement -

இப்படி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களை விடுத்து ஒரே விக்கெட்டை எடுத்த ஜோஷ் ஹேசல்வுட்டுக்கு நேற்றைய போட்டிக்கான ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இப்படி ஒரு விக்கெட் எடுத்த அவருக்கு ஏன் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது? என்பது குறித்த கேள்விக்கு கிரிக்கெட் நிபுணர்கள் சில முக்கிய காரணங்களை சுட்டிக் காட்டியுள்ளனர்.

அந்த வகையில் அவர்கள் குறிப்பிடதாவது : லக்னோ அணியில் ஆரம்பத்திலேயே மார்க்ரம் விக்கெட் விழுந்ததும் ரிஷப் பண்ட் காயம் காரணமாக வெளியேறினார். அதன்பின்னர் நிக்கோலஸ் பூரான் களத்திற்கு வந்தார். லக்னோ அணியை பொருத்தவரை நிக்கோலஸ் பூரான் தான் அந்த அணியின் மிகப்பெரிய மேட்ச் வின்னர். எனவே அவரை வீழ்த்தினால் அந்த அணியை எளிதாக வீழ்த்தலாம் என்பதற்காக ஹேசல்வுட்டிற்கு தொடர்ந்து மூன்றாவது ஓவரை வீச வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

அப்படி 3 ஆவது ஓவரை தொடர்ந்து வீசிய அவர் பவர்பிளே ஓவர் முடிந்த கையோடு 7 ஆவது ஓவரின் முதல் பந்திலேயே பூரானை வீழ்த்தினார். அவரது அந்த விக்கெட் விழுந்தது தான் மேட்சின் திருப்புமுனையாக அமைந்தது. இல்லையெனில் போட்டியின் ரன் குவிப்பு எப்படி வேண்டுமென்றாலும் சென்றிருக்கலாம். இப்படி முக்கியமான நேரத்தில் அந்த அணியின் முக்கிய வீரரை ஹேசல்வுட் வீழ்த்தியதால் மற்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட சாதகமான சூழல் அமைந்தது.

இதையும் படிங்க : 3 ஆவது இந்திய வீரராக ஐ.பி.எல் போட்டிகளில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய க்ருனால் பாண்டியா – விவரம் இதோ

அதுமட்டுமின்றி பேட்டிங்கிற்கு சாதகமான இந்த சிறிய மைதானத்தில் 4 ஓவர்களில் வெறும் 20 ரன்கள் மட்டுமே கச்சிதமாக விட்டுக் கொடுத்து எதிரணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியதால் அவருக்கு இந்த ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டி உள்ளனர்.

Advertisement