லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 23-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சார்பாக விளையாடிய நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான க்ருனால் பாண்டியா 4 ஓவர்கள் பந்துவீசி 38 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
3 ஆவது இந்திய வீரராக க்ருனால் பாண்டியா நிகழ்த்திய சாதனை :
இப்படி நேற்றைய போட்டியில் அவர் எடுத்த 2 விக்கெட்டுகள் மூலம் அவர் மூன்றாவது இந்திய வீரராக ஐ.பி.எல் போட்டிகளில் மாபெரும் சாதனை ஒன்றிணையும் நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : நேற்றைய போட்டியில் லக்னோ அணியின் துவக்க வீரரான மிட்சல் மார்ஷ் விக்கெட்டை அவர் வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் தனது 100-ஆவது விக்கெட்டை பதிவு செய்தார்.
இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய 30-வது பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் அவர் நிகழ்த்தினார். பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் இதுவரை ஐ.பி.எல் போட்டிகளில் 1757 ரன்களை குறித்துள்ளார். இதன் மூலம் ஐ.பி.எல் தொடரில் 100 ரன்களுக்கு மேல் குவித்து 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை இவர் நிகழ்த்தியுள்ளார்.
இவருக்கு முன்னதாக ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் ஐ.பி.எல் போட்டிகளில் 1000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளுக்கு மேலும் எடுத்துள்ள வேளையில் இந்த பட்டியலில் மூன்றாவது வீரராக க்ருனால் பாண்டியா இந்த தனித்துவமான பட்டியலில் இணைந்துள்ளார்.
இதையும் படிங்க : ஒரு கேப்டனா இதைவிட வேற என்ன வேணும்? லக்னோ அணியை வீழ்த்திய பின்னர் – ரஜத் பட்டிதார் ஹேப்பி
அதுமட்டும் இன்றி சர்வதேச அளவில் சுனில் நரேன், டுவைன் பிராவோ மற்றும் ஆண்ட்ரே ரசல் ஆகியோருக்கு பிறகு இந்த இரட்டை சாதனையை நிகழ்த்திய ஆறாவது சர்வதேச வீரர் என்ற பெருமையும் க்ருனால் பாண்டியா பெற்றுள்ளார். கடந்த ஆண்டு ஆர்.சி.பி அணி கோப்பையை வென்றபோது அந்த தொடரின் இறுதிப்போட்டியில் இவரே ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.



