ரஹானேவிற்கு முன்னதாக ஜடேஜா நேற்றைய போட்டியில் களமிறங்க இதுவே காரணம் – விவரம் இதோ

Jadeja
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நேற்று ஓவல் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணியானது 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் மற்றும் ராகுல் ஆகியோர் முறையே 11, 17 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில் அடுத்து வந்த புஜாராவும் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

rahul 1

- Advertisement -

இதனால் இந்திய அணியானது ஒரு கட்டத்தில் 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஒரு இக்கட்டான நிலையை சந்தித்தது. அப்போது கேப்டன் விராட் கோலியுடன் 5 ஆவது வீரராக ரகானே களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதுதான் இந்திய அணியும் வழக்கம். இதுவரை 5 ஆவது வீரராக ரஹானே தான் விளையாடி வந்தார்.

ஆனால் நேற்றைய போட்டியில் ரஹானேவிற்கு முன்னதாக ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 5 ஆவது வீரராக களமிறங்கினார். இப்படி ஜடேஜா ஐந்தாம் வீரராக களம் இறங்கியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இருப்பினும் ஜடேஜா 10 ரன்களிலும், ரகானே 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் தாகூர் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 57 ரன்களை குவிக்க இந்திய அணியானது 191 ரன்களை குவித்தது.

jadeja 2

இந்நிலையில் இந்த முதல் நாள் ஆட்டம் முடிந்த பின்பு ரவீந்திர ஜடேஜா ஏன் ரகானேவுக்கு முன்னதாக களமிறங்கினார் என்பது குறித்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் பேட்டியளித்திருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஜடேஜா ஐந்தாவது இடத்தில் களமிறங்க காரணம் யாதெனில் இக்கட்டான சூழ்நிலையில் ஜடேஜா ரன்களை குவித்து வருகிறார் இதனை நாம் கடந்த சில போட்டிகளில் பார்த்து வருகிறோம்.

jadeja

அதுமட்டுமின்றி எவ்வித பதற்றமும் இல்லாமல் விளையாடக் கூடியவர் ஜடேஜா. அதேபோன்று களத்தில் வலதுகை இடதுகை காம்பினேஷன் இருந்தால் பவுலர்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்பதாலும் ஜடேஜா முன்கூட்டியே களமிறக்கப்பட்டார் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement