- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2026 டி20 உலககோப்பை தொடரில் இஷான் கிஷனை தேர்வு செய்ய என்ன காரணம்? – விவரம் இதோ

2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று பி.சி.சி.ஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்த இந்திய அணியில் 15 வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இன்று வெளியான இந்த அறிவிப்பில் அணியின் முக்கிய மாற்றமாக துணை கேப்டன் சுப்மன் கில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இஷான் கிஷன் டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றது ஏன்? :

அதேபோன்று மிக முக்கியமான மாற்றமாக கடந்த ஓராண்டாக இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பிளஸ் பினிஷிங் ரோலில் விளையாடி வந்த ஜிதேஷ் சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இஷான் கிஷன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இப்படி ஜிதேஷ் சர்மா நீக்கப்பட்டு இஷான் கிஷன் அணிக்குள் வந்துள்ளது பலரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் ஐபிஎல் போட்டிகளில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பிடித்து இந்திய அணியிலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்தியிருந்தார். இவ்வேளையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பெறாமல் தவித்து வந்த இஷான் கிஷனுக்கு மீண்டும் டி20 உலககோப்பை தொடரில் நேரடியாக வாய்ப்பு வழங்க என்ன காரணம்? என்பது பலரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து இப்படி நேரடியாக இஷான் கிஷன் இந்திய அணியில் வர என்ன காரணம் என்பது குறித்த தகவலை இங்கு காணலாம். அந்த வகையில் ஏற்கனவே இந்திய அணிக்காக மூன்று வகையான போட்டிகளிலும் இடம் பிடித்து விளையாடியுள்ள இஷான் கிஷன் அவரது தனிப்பட்ட ஒழுக்கம் காரணமாக இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

- Advertisement -

ஆனாலும் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த அவர் தனது திறனை தொடர்ச்சியாக நிரூபித்து வந்தார். அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு அண்மையில் நடைபெற்ற முடிந்த சையத் முஷ்டாக் அலி தொடரில் ஜார்கண்ட் அணியை தலைமை தாங்கி வழிநடத்திய அவர் இறுதிவரை கொண்டு சென்று அந்த அணியை முதல் முறையாக சாம்பியனாகவும் மாற்றியுள்ளார்.

இதையும் படிங்க : ஜிதேஷ் சர்மா விடயத்தில் நிர்வாகம் செய்தது தவறு.. டி20 உலககோப்பை அணித்தேர்வு குறித்து – இர்பான் பதான் கேள்வி

அதோடு இந்த சையத் முஷ்டாக் அலி தொடரில் அதிக ரன்களை குவித்த வீரராக அசத்திய அவர் அதிரடியான சதத்தையும் பதிவு செய்து அசத்தியிருந்தார். இதன் காரணமாகவே மீண்டும் அவருக்கு டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் டி20 உலககோப்பை தொடரில் சஞ்சு சாம்சனே பெரும்பாலும் துவக்க வீரராக விளையாடுவார் என்பதால் இவர் பெஞ்சிலேயே அமர அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -