பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டது ஏன் தெரியுமா ? – பவுலிங் கோச் அளித்த பதில்

Prasidh
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியானது இன்று மதியம் மூன்று முப்பது (3:30) மணி அளவில் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலை வகிக்கும் என்கிற காரணத்தினால் இரு அணிகளுக்கும் இடையே பலத்த போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நிச்சயம் இந்த ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

indvseng

- Advertisement -

ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இதன் காரணமாக இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என தெரிகிறது.

ஏனெனில் ஏற்கனவே முதல் மூன்று போட்டிகளில் அஷ்வின் சேர்க்கப்படாததால் இன்றைய போட்டியில் அவர் விளையாடுவார் என்று தெரிகிறது. அதேபோல் மற்றொரு பவுலிங் மாற்றமும் ஏற்படுமா ? என்பது இந்த போட்டியின் துவக்கத்தில் தெரியவரும். ஏற்கனவே இந்திய அணியில் 4 வேகப்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசி வரும் வேளையில் ஷர்துல் தாகூர் வாய்ப்பு கிடைக்காமல் வெளியே உள்ளார்.

prasidh 1

இந்நிலையில் இவர்களுக்கு அடுத்து தற்போது மற்றொரு வேகப்பந்து வீச்சாளராக பிரசித் கிருஷ்ணா 4வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது இந்த சேர்க்கை அனைவருக்கும் ஆச்சரியமாக அமைந்தது.

இந்நிலையில் பிரசித் கிருஷ்ணா ஏன் அணியில் தேர்வு செய்யப்பட்டார் ? என்பது குறித்து இந்திய அணியின் பௌலிங் கோச் பரத் அருண் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணா முன்னெச்சரிக்கை காரணமாகவே அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இருப்பினும் அவருக்கு பிளெயின் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா ? என்று கேட்டால் அது சந்தேகம்தான்.

Advertisement