கெயில் மற்றும் ரஹானே போன்ற ஜாம்பவான் பேட்ஸ்மேன்களுக்கே 11 பேர் கொண்ட அணியில் இடமில்லையா ? – காரணம் இதுதான்

Rahane
- Advertisement -

ஐபிஎல் தொடரில் இந்த வருடம் பல வித்தியாசமான மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. உள்ளூர் வீரர்கள் பட்டையைக் கிளப்பி தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். எதிர்பார்க்கும் பல ஜாம்பவான்கள் சரியாக விளையாடவில்லை. இதுபோல் பல அணிகளை முக்கியமான வீரர்கள் தற்போது வரை களமிறங்கவில்லை.

- Advertisement -

ஒவ்வொரு அணியும் குறைந்தது மூன்று போட்டிகளில் விளையாடி விட்டது. ஆனால் கிறிஸ் கெய்ல், அஜிங்கியா ரகானே போன்ற வீரர்கள் தற்போது வரை வெளியில்தான் உட்கார வைக்கப்பட்டு வருகிறார்கள். இதில் டெல்லி அணிக்கு இந்த வருடம் அஜின்கியா ரஹானே மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணியில் இருந்து மாற்றப்பட்டு வாங்கப்பட்டார்கள் .

இதில் ரவிசந்திரன் அஸ்வின் பந்து வீச்சு திறமையைக் கொண்டு முதல் போட்டியில் இறங்கி ஒரு ஓவரில் 2 விக்கெட் வீழ்த்தி அசத்திவிட்டார். ஆனால் அஜின்கியா ரகானே அந்த அணியில் தற்போது வரை களமிறங்கவில்லை.

Rahane

இதற்கு காரணம் அந்த அணியின் துவக்க வீரர்கள் தான். ஷிகர் தவான் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் நன்றாக விளையாடி வருகிறார்கள். அதேநேரத்தில் நேரத்தில் அஜின்கியா ரகானே துவக்க இடத்தில் ஆடக் கூடிய வீரர். இதன் காரணமாக அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேநேரத்தில் பஞ்சாப் அணியில் இருக்கும் கிறிஸ் கெய்ல் இதே விவகாரத்தை தான் கையாண்டு வருகிறது.

Gayle

அங்கிருக்கும் துவக்க வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் மாயங் அகர்வால் இருவருமே தலா ஒரு சதம் அடித்து ஐபிஎல் தொடரில் மிகச் சிறந்த வீரர்களாக வலம் வருகிறார்கள். இருப்பினும் முக்கிய போட்டிகளில் அவர் துவக்க வீரராக களமிறங்குவார் என்று ராகுல் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவையே அவர்கள் இருவருக்கும் வாய்ப்பு கிடைக்காத காரணமாக பார்க்கப்படுகிறது.

Advertisement