இந்திய அணியில் மென்டராக தோனி செய்யப்போகும் வேலை என்ன ? – அவரோட இந்த பதவி எதற்கு ?

Dhoni
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த இந்திய அணியில் 15 முதன்மை வீரர்கள் மட்டுமின்றி 3 ஸ்டான்ட் பை வீரர்களும் அறிவிக்கப்பட்டனர். அதோடு யாரும் எதிர்பாராத வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அணியின் ஆலோசகராக நியமித்து அதிரடி காட்டிய பிசிசிஐ மேலும் இந்த டி20 உலக கோப்பை தொடரில் தோனி இந்திய அணியுடன் இருக்கப் போகிறார் என்றும் எங்களது வேண்டுகோளை ஏற்று இந்திய அணியுடன் பணியாற்ற தோனி முன்வந்து உள்ளதால் அவருக்கு நன்றியும் தெரிவித்தது.

Dhoni

- Advertisement -

இந்நிலையில் அப்படி தோனி இந்திய அணியுடன் இணைந்து செய்யப்போகும் வேலை என்ன ? என்பது குறித்த கேள்விகளே அதிகம் எழுந்துள்ள. ஏனெனில் இந்திய அணியில் ஏற்கனவே முதன்மை பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர், பீல்டிங் பயிற்சியாளர், பவுலிங் பயிற்சியாளர் என அனைத்து பிரிவுகளுக்கும் தனித்தனி பயிற்சியாளர்கள் இருக்கும் வேளையில் அணியின் ஆலோசகராக தோனி என்ன வேலை செய்யப் போகிறார் ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாகவே நாங்கள் இந்த பதிவை உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி ரவி சாஸ்திரி கிரிக்கெட் விளையாடிய காலம் நீண்ட ஆண்டுகளுக்கு முன்னர். ஆனால் தோனி தற்போது வரை வரை கிரிக்கெட் விளையாடி வருகிறார். அது மட்டுமின்றி இந்திய அணியில் இருக்கும் வீரர்களுடன் அவருக்கு நெருக்கமான பழக்கம் உள்ளது. அதையும் தாண்டி தோனி டி20 கிரிக்கெட்டில் ஏகப்பட்ட அனுபவங்களை கொண்டவர். அவர் பார்க்காத எதிரணியோ, அவர் பார்க்காத பவுலர்களோ, அவர் பார்க்காத போட்டியின் இக்கட்டான சூழ்நிலையோ கிடையாது.

dhoni with pant

இப்படி அனைத்தையும் பார்த்த அனுபவம் கொண்டவர் தோனி. இதன் காரணமாக இந்திய அணி இந்த உலகக் கோப்பைத் தொடரில் எந்தெந்த போட்டிகளில் எப்படி எதிர்த்து எவ்வாறு விளையாட வேண்டும் ? எந்த நேரத்தில் பவுலர்களை மாற்ற வேண்டும் ? எந்தெந்த பீல்டிங் வியூகங்களை அமைக்க வேண்டும் ? போட்டிகளின்போது இக்கட்டான சூழலில் எவ்வாறு விளையாட வேண்டும் என்பது குறித்து தனது அனுபவத்தை நேரடியாக இந்திய அணியின் வீரர்களிடம் கொண்டு சேர்க்க போகிறார்.

Dhoni

இதுதான் அவருடைய வேலை இந்திய அணிக்கு ஒரு ஆலோசகராக வீரர்களின் செயல்பாடுகள் குறித்த தெளிவையும் தோனி வழங்க உள்ளார். நிச்சயம் தோனியின் அறிவுரை மூலம் இந்திய அணி சிறப்பாக விளையாடி இந்த டி20 உலக கோப்பை தொடரை வெல்ல வேண்டும் என்பதே பி.சி.சி.ஐ-யின் விருப்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement