பேட்டிங் செய்ய களமிறங்கும் முன் தோனி பேட்டினை கடிப்பது ஏன் தெரியுமா? – இப்படி ஒரு விஷயம் இருக்கா?

Dhoni
Advertisement

நடப்பு ஐபிஎல் தொடரின் 55-வது லீக் போட்டி நேற்று தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது.

Ruturaj

இந்தப் போட்டியில் சென்னை அணியின் தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் 41 ரன்களும், டேவான் கான்வே 87 ரன்களையும் குவித்து அசத்தினார்கள். பின்னர் இறுதி நேரத்தில் களமிறங்கிய தோனி தான் சந்தித்த 8 பந்துகளில் 21 ரன்கள் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து விளையாடிய டெல்லி அணியால் 20 ஓவர்களின் முடிவில் 117 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.

- Advertisement -

இதன் காரணமாக சி.எஸ்.கே 91 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் தோனி பேட்டிங் செய்ய களமிறங்குவதற்கு முன்னர் வெளியில் அமர்ந்து தனது பேட்டை பல்லால் கடித்து கொண்டிருந்தார். இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

dhoni 1

மேலும் அனைவரும் ஏன் இப்படி தோனி பேட்டிங் செய்ய களம் இறங்கும் முன் தனது பேட்டை கடிக்கிறார் என்று கேள்வி எழுப்பியிருந்தனர். இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு பதிலளித்துள்ள இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா கூறுகையில் : தோனி அவரது பேட்டை ஏன் கடிக்கிறார் என்று நீங்கள் அனைவரும் யோசித்து இருப்பீர்கள். அதற்கு காரணம் யாதெனில் :

- Advertisement -

அவர் எப்போதுமே தனது பேட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளும் பழக்கம் உடையவர். எனவே அவரது பேட்டில் ஏதாவது டேப் இருந்தாலோ அல்லது நூல் இருந்தாலோ அதனை பார்த்து கடித்து அகற்றுவார். தோனியின் பேட்டில் எப்போதுமே டேப் அல்லது நூல் ஆகியவை இருந்து நீங்கள் பார்த்து இருக்கவே மாட்டீர்கள். அதனை சரி செய்யவே தோனி இது போன்று செய்து வருகிறார் என்று அமித் மிஸ்ரா கூறியுள்ளார்.

இதையும் படிங்க : 200 ரன்களுக்கு மேல் அடிக்க நாங்கள் போட்ட இந்த கணக்கு தான் காரணம் – ருதுராஜ் கெய்க்வாட் ஓபன்டாக்

ஐபிஎல் தொடரில் பல ஆண்டுகளாக தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வந்த அமித் மிஸ்ரா இந்த ஆண்டு வயது மூப்பின் காரணமாக எந்த அணியிலும் தேர்வு செய்யப்படாமல் வெளியில் அமர்ந்து போட்டிகளைப் பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement