ஷிகர் தவானை ஓரம்கட்டிய கங்குலி.! ஓப்பனிங் ஆடும் தகுதி இவர்களுக்கு மட்டும்தான்.!

Dhawan

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியில் துவக்க ஆட்டக்கார்களாக கே எல் ராகுல் மற்றும் முரளி விஜய் களமிறங்க வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கங்குலி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Gangully

ஐயர்லாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற்ற தெம்போடு இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. மூன்று டி20 போட்டிகளை தொடர்ந்து 5 டெஸ்ட் போட்டியிலும், 3 ஒரு நாள் போட்டியிலும் விளையாடவுள்ளது. பலம் வாய்த்த இங்கிலாந்து அணியை வெல்ல அணியில் செய்யவேண்டிய சில மாற்றத்தை குறித்து கங்குலி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்த கங்குலி, இந்திய அணியின் ஆடும் 11 வீரர்கள் பட்டியலில் யார் யார் எந்தெந்த வரிசையில் களமிறங்க வேண்டும் என்பதையும் கூறியுள்ளார்.அதில் “கே எல் ராகுல் மற்றும் முரளி விஜய் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க வேண்டும், புஜாரா 3 வது இடத்திலும், கோலி 4 வது இடத்திலும் இவர்களை தொடர்ந்து ரஹானே(5), விர்திமன் சாகா (6), பாண்டியா (7), போன்றவர்கள் இருக்க வேண்டும் ” என்று தெரிவித்துள்ளார்.

kl rahul murali vijay
kl rahul murali vijay

அதே போல முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வினிற்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் இடம்பெற வேண்டும், ஏனெனில் அவர் எதிரணியின் மன நிலையில் குழப்பத்தை ஏற்படுத்தும் அளவிற்கு தகுதி உடையவர்’ என்றும் கங்குலி தெரிவித்துள்ளார். கங்குலி தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று கூறிய கே எல் ராகுல் சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 659 ரன்களை குவித்திருந்தார் என்பது குறிப்பித்தக்கது.