- Advertisement -
உலக கிரிக்கெட்

13 வயது சிறுவன்..! தீவிரவாத அச்சுறுத்தல்.! பல தடைகளை தாண்டி கிரிக்கெட்டில் நுழைந்தது எப்படி..?அஃப்கானிஸ்தான் அணி ரகசியம்.!

ஆப்கானிஸ்தான் அணி கடந்த 2017 ஆம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்தை பெற்ற 12 நாடுகளில் ஒரு நாடக இடம்பெற்றது. இந்த டெஸ்ட் அந்தஸ்தை பெற ஆப்கானிஸ்தான் அணி 30 ஆண்டுகளுக்கு மேலாக கத்துக்க கொண்டிருந்தது. இந்த அணி சர்வதேச தரத்தை பெற கடந்து வந்த பாதையை பற்றி கொஞ்சம் திரும்பி பார்க்கலாம்.

*ஆப்கானிஸ்தான் நாட்டில், தாஜ் மாலிக் என்ற 13 வயது சிறுவன் ஒரு பிளாஸ்டிக் பந்தை வைத்து தனது சகோதரருடன் கிரிக்கெட் ஆட தொடங்கினர். பின்னர் அவர் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒரு கிரிக்கெட் வீரராக மாறிவிட்டார்.

- Advertisement -

*1980 ஆம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தான் அணிக்கு கிரிக்கெட் உலகில் இடம் மறுக்கப்பட்டது. அப்போது அங்கே மிக மோசமான கலவரங்கள் நடைபெற்று வந்ததால் அந்த நாட்டில் உள்ள பல்வேறு மக்கள் பாகிஸ்தானுக்கு அகதிகளாக சென்றனர்.

*1990 வரை தாலிபானின் பிடியில் இருந்த ஆப்கானிஸ்தான் விளையாட்டு என்ற ஒரு சொல்லுக்கு இடமளிக்காமல் இருந்தது . பின்னர் 1995 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சங்கம் என்ற ஒன்றை அல்லாஹ் தாத் தூறி என்ற கிரிக்கெட் வீரர் நிறுவினார்.

- Advertisement -

*தனது ஆரம்பகால போட்டிகளை பெஷாவர் லீக் போட்டிகளில் விளையாட தொடங்கியது. பின்னர் ஆறு ஆண்டுகள் களைத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு கிரிக்கெட்டில் தொடர்புடைய ஒரு நாடு என்ற தகுதியை ஐ சி சி கொடுத்தது.

*ஆப்கானிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக தாஜ் மாலிக் அறிவிக்கப்படுகிறார். ஆப்கானிஸ்தான் அணி 2008 ஆம் ஆண்டு அந்த அணி மற்ற நாட்டு கிரிக்கெட் ரசிகர்களால் கவனிக்க படுகின்றனர்.

*2010 ஆம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலக கோப்பை தகுதி போட்டியில் வெற்றி பெற்று, கிரிக்கெட் உலகில் தனது முதல் இலக்கை அடைகிறது அபிஜினிஸ்தான் அணி. 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலக கோப்பை போட்டியில் தன்னை விட மூத்த அணியான ஜிம்பாபே மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி சாதனை படைத்தது.

*2019 ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரின் தகுதி சுற்றில் ஜிம்பாபே அணியை வீழ்த்தி, தனது மிகப்பெரிய சாதனையாக கருதியது. ஆப்கானிஸ்தான் அணி பல்வேறு தடைகளுக்கு பின்னர் தான் தற்போது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனது பெயரை பதித்துள்ளது என்பது மிகவும் பாராட்டக்கூடிய விடயம் தான்.

- Advertisement -
Published by