சச்சின் மற்றும் டிராவிட் ஆகியோரது பெயரையே தன் பெயராக வைத்துள்ள நியூசி வீரர் – யார் இந்த பிளேயர்?

Rachin

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்த நியூசிலாந்து அணியானது தற்போது அடுத்த இரண்டு நாட்களிலேயே இந்தியா பயணித்து இந்திய அணிக்கு எதிரான தொடரில் இணைந்து விளையாடி வருகிறது. இதன் காரணமாக அணியில் உள்ள சீனியர் வீரர்கள் கேன் வில்லியம்சன், இஷ் சோதி, ஆடம் மில்னே, நீஷம் ஆகியோர் இந்த டி20 போட்டிகளில் விளையாடவில்லை. அவர்களுக்கு பதிலாக தற்போது இந்த தொடரின் முதல் போட்டியில் சேப்மன், டாட் ஆஸ்டில், ரச்சின் ரவீந்திரா, பெர்குசன் ஆகியோர் விளையாடினர்.

rachin 1

இந்த போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 164 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய இளம் ஆல் ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா என்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம் வீரர் அதிக அளவு இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதன் பின்னால் ஒரு சுவாரசியமான விஷயம் உள்ளது.

- Advertisement -

அது யாதெனில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அவர் வைத்திருக்கும் பெயரில்தான் முழு சுவாரசியமும் அடங்கியுள்ளது. ஏற்கனவே இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் நியூசிலாந்து அணியில் விளையாடி இருந்தாலும் இவர் தனித்துவமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் நியூசிலாந்து தலைநகரம் வெலிங்டன் நகரில் இந்தியாவை சேர்ந்த தம்பதிகளுக்கு பிறந்தவர் தான் இந்த ரச்சின் ரவீந்திரா.

rachin 2

அவரது தந்தையின் பெயர் ரவி. இந்தியாவை பூர்வீகமாக கொண்ட அவர் இந்திய கிரிக்கெட் அணியின் மிக தீவிர ரசிகர் என்பதால் இந்திய கிரிக்கெட் வீரர்களின் மீது தீராத பிரியம். அந்தவகையில் அவருக்கு மிகவும் பிடித்த சச்சின் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரது பெயரை தன் மகனுக்கு வைக்க வேண்டும் என்று விரும்பி ராகுல் டிராவிடின் பெயரில் இருந்த (RA) ர, சச்சின் பெயரில் இருந்த (CHIN) ச்சின் என்பதை எடுத்து (RA+CHIN =RACHIN) ரச்சின் ரவீந்திரா என்று பெயர் சூட்டியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : சிராஜை விட பெஸ்ட் பவுலர் அவர்தான். அடுத்த போட்டியில் அவருக்கு வாய்ப்பு கொடுங்க – தினேஷ் கார்த்திக்

2016-ஆம் ஆண்டு மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்காக விளையாடிய ரச்சின் ரவீந்திரா கடந்த ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார். இதுவரை 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் தற்போது முன்னணி வீரர்கள் ஓய்வில் உள்ளதால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியாவிலேயே விளையாடியது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அவர் அளித்துள்ள பேட்டியில் சச்சின் டெண்டுல்கர் தனது முன்மாதிரி என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement