சிராஜை விட பெஸ்ட் பவுலர் அவர்தான். அடுத்த போட்டியில் அவருக்கு வாய்ப்பு கொடுங்க – தினேஷ் கார்த்திக்

karthik
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்று முடிந்த வேளையில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக விளையாடிய இளம் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் 4 ஓவர்களில் 39 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றியிருந்தார்.

siraj 2

- Advertisement -

என்னதான் அவர் சிறப்பாக பந்துவீசி இருந்தாலும் அவரது ஓவரில் ரன்கள் அதிகமாகக் கசிந்தது. அதுமட்டுமின்றி முதல் இன்னிங்சின் கடைசி ஓவரில் அவருக்கு கையில் அடிபட்டு தையல் போடும் அளவிற்கு காயம் அதிகமாகி உள்ளதால் அவர் அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம் ஆகியுள்ளது.

இந்நிலையில் சிராஜின் இடம் குறித்து பேசியுள்ள தமிழக கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான தினேஷ் கார்த்திக் கூறுகையில் : சிராஜ் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய இருவருமே சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள். நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு யாரை வேண்டுமென்றாலும் அணியில் சேர்க்கலாம்.

Harshal-2

ஆனால் தனிப்பட்ட முறையில் என்னை பொருத்தவரை ஹர்ஷல் படேல் டி20 போட்டிகளில் சிறந்தவர் என்று தோன்றுகிறது. ஏனெனில் சிராஜ் வேகமாக பந்துவீச கூடியவர். அதே வேளையில் ஹர்ஷல் படேல் ஸ்லோ பால்களை அதிகம் பயன்படுத்தக் கூடியவர். அதுவும் சரியான நேரத்தில் சரியான ஸ்லோ பால்களை வீசும் திறன் உடையவர். இதுபோன்ற பந்துவீச்சுக்கு டி20 போட்டிகளுக்கு மிகவும் அவசியம் என்று தினேஷ் கார்த்திக் குறிப்பிட்டார்.

- Advertisement -

இதையும் படிங்க : அடுத்த 2 டி20 போட்டிகளிலும் இந்திய வீரரான இவர் விளையாடுவது சந்தேகம் – அதுக்குள்ள இப்படி ஒரு பிரச்சனையா?

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ஹர்ஷல் படேல் போல ஆவேஷ் கானும் சிறந்த பவுலர் தான். இருப்பினும் எனக்கு தெரிந்தவரை ஹர்ஷல் படேலை பயன்படுத்திப் பார்க்கலாம். முதலாவது போட்டியில் சிராஜிக்கு சரியான நேரத்தில் ஓவர்கள் வழங்கப்படவில்லை. பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தும்போது சிராஜ் பந்து வீசினால் அவரால் நிச்சயம் சிறப்பாக பந்து வீச முடியும் என்று தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement