களத்தில் அவர் இருக்கும் வரை இந்தியா தோற்காது.. இளம் வீரருக்கு ஹர்பஜன் பாராட்டு

Harbhajan Singh 7.jpeg
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க மண்ணில் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் துவங்கியுள்ள இந்திய கிரிக்கெட் அணி அதற்காக நடைபெற்ற முடிந்த ஆஸ்திரேலிய தொடரில் 4 – 1 என்ற கணக்கில் வென்றது. இதைத்தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கும் இந்திய தயாராகியுள்ளது.

இந்த 2 தொடர்களிலுமே விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஜெய்ஸ்வால், ருதுராஜ், முகேஷ் குமார், ரிங்கு சிங், ரவி பிஸ்னோய் போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றியில் பங்காற்றி தங்களை வருங்கால நம்பிக்கை நட்த்திரங்களாக அடையாளப்படுத்தினார்கள்.

- Advertisement -

இந்தியா தோற்காது:
அதில் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேனாக விளையாடிய ரிங்கு சிங் ஆஸ்திரேலிய டி20 தொடரில் 105 ரன்களை 175.00 என்ற அபாரமான ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி இந்தியாவின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார். கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிராக கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர் இந்தியாவுக்காக அறிமுகமானார்.

அந்த வாய்ப்பில் இதுவரை அயர்லாந்து, 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஆஸ்திரேலியா ஆகிய தொடர்களில் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாட வேண்டிய சூழ்நிலையில் தில்லாக நின்ற ரிங்கு சிங் மிகச்சிறப்பாக ஃபினிஷிங் செய்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அதனால் எம்எஸ் தோனி போல இவரும் வருங்காலத்தில் நல்ல ஃபினிஷராக செயல்படுவார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் 25 பந்துகளில் 60 ரன்கள் தேவை என்ற கடினமான சூழ்நிலையில் கூட ரிங்கு சிங் களத்தில் இருந்தால் இந்தியா தோற்காது என்று ஹர்பஜன் சிங் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரிங்கு சிங் அற்புதமான திறமை கொண்டவர். அவரிடம் சிக்சர்கள் அடிப்பதில் நல்ல தன்னம்பிக்கை இருக்கிறது. அவரைப் போன்ற வீரர் தான் இந்தியாவுக்கு 5, 6 ஆகிய பேட்டிங் இடத்தில் தேவை”

இதையும் படிங்க: பாபர் அசாம் அந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் கண் கலங்கியபடி நின்றார் – குர்பாஸ் கூறிய தகவல்

“மிகவும் கடினமான அந்த இடத்தில் ஃபினிஷராக வேலை செய்வது எளிதல்ல. இருப்பினும் அதிரடியாக அடிக்கும் திறமையுடன் அமைதியாக இருக்கும் அவரின் பண்பும் நன்றாக இருக்கிறது. அவர் தனது அடிக்கும் திறன் மற்றும் நிதானம் ஆகியவற்றில் எம்எஸ் தோனியை ஒத்தவராக இருக்கிறார். எனவே கடைசி 25 பந்துகளில் 60 ரன்கள் தேவை என்ற சூழ்நிலையில் கூட ரிங்கு சிங் களத்தில் இருந்தால் போட்டி முடிந்து விடாது” என்று கூறினார்.

Advertisement