சென்னை அணி பிளேஆப் சுற்றுக்கு போகனுனா இந்த மேஜிக் நிகழ்ந்தால் மட்டும்தான் முடியுமாம் – நடக்குமா?

CSK-1
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் 15-வது ஐபிஎல் தொடரானது நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இதுவரை குதூகலமாக இல்லை என்று கூறலாம். ஏனெனில் ஐபிஎல் வரலாற்றில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியானது 2020 ஆம் ஆண்டினை தவிர்த்து மற்ற அனைத்து சீசன்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு சென்ற ஒரே அணி என்ற மகத்தான சாதனையை படைத்து இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின் ஜடேஜா தலைமையில் சென்னை அணியானது எவ்வாறு செயல்படப் போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

CSK vs RCB 2

- Advertisement -

இவ்வேளையில் முதல் 8 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது சென்னை அணியானது 6 தோல்விகளை சந்தித்து வெறும் நான்கு புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் மும்பை அணிக்கு அடுத்ததாக ஒன்பதாவது இடத்தில் உள்ளது. எனவே இனிவரும் 6 போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. ஏற்கனவே இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் மோதுவதால் பிளே ஆப் சுற்றுக்கு தேர்வாகும் அணிகள் எவை என்பதை முன்கூட்டியே கணிப்பது கடினம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை அணி தற்போதே 8 போட்டிகளில் 6 தோல்விகளை சந்தித்துள்ளதால் இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்றே ஆகவேண்டும். இல்லையெனில் இந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு சென்னை அணி செல்லாது. சென்னை அணியின் இந்த தொடர் தோல்விகளுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இதுவரை ஒரு பலமான அணியாக சென்னை மாறவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

CSK Lost to LSG

சிஎஸ்கே அணி இனி வரும் 6 போட்டியில் ஒரு தோல்வி அடைந்தாலும் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழக்கும் அபாயத்தில் உள்ள நிலையில் தற்போது சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமெனில் ஒரு மேஜிக் நிகழ்ந்தே ஆகவேண்டும் என்று கூறப்படுகிறது. அந்தவகையில் சென்னை அணி இனி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமெனில் அடுத்ததாக நடைபெற இருக்கும் 6 போட்டிகளிலும் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.

- Advertisement -

மேலும் அப்படி வெற்றி பெறும் பட்சத்தில் ரன் ரேட்டும் சிறப்பாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில் மீதமுள்ள 6 போட்டிகளை சென்னை அணி வெற்றி பெறும் பட்சத்தில் 16 புள்ளிகளுடன் இருக்கும் ஆனால் நல்ல ரன்ரேட் இருப்பது அவசியம். அதே போன்று மற்ற அணிகளின் வெற்றிகளும் சற்று மோசமாக இருந்தால் மட்டுமே ரன் ரேட் அடிப்படையில் சென்னை அணி தகுதி பெற வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : உன்கிட்டலாம் நான் கைகொடுக்க முடியாது. சின்னப்பையனை அவமதித்த ஹர்ஷல் படேல் – என்ன நடந்தது?

இடையில் ஏதாவது ஒரு போட்டியில் தோற்றாலும் நிச்சயம் சென்னை அணி இந்த தொடரில் இருந்து வெளியேற வேண்டியதுதான். எனவே இனி அடுத்தடுத்து வரும் 6 போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெற்று நல்ல ரன் ரேட் வைத்திருக்கும் மேஜிக் நடை பெற்றால் மட்டுமே ப்ளே ஆப் சுற்றுக்கு சென்னை அணி செல்ல ஒரு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement