உன்கிட்டலாம் நான் கைகொடுக்க முடியாது. சின்னப்பையனை அவமதித்த ஹர்ஷல் படேல் – என்ன நடந்தது?

Harshal Patel Riyan Parag Fight
- Advertisement -

அனல் பறக்கும் ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெற்ற 39-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் சந்தித்தன. புனேவில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கடும் போராட்டத்திற்குப் பின் 144/8 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் தேவ்தூத் படிக்கல் 7 (8) ஜோஸ் பட்லர் 8 (9) போன்ற நம்பிக்கை நட்சத்திரம் தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற 3-வதாக வந்த அஷ்வின் 4 பவுண்டரி உட்பட 17 (9) ரன்களும் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக 1 பவுண்டரி 3 சிக்சருடன் 27 (21) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.

Riyan Parag 56.jpeg

- Advertisement -

அதன் காரணமாக 68/4 என சரிந்த அந்த அணியை அடுத்து களமிறங்கிய டார்ல் மிட்சேல் 16 (24) ரன்கள் எடுத்து காப்பாற்ற போராடி ஆட்டமிழந்தார். அதே சமயம் ஷிம்ரோன் ஹெட்மயரும் 3 (7) ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஆனால் அவருடன் களமிறங்கிய இளம் வீரர் ரியான் பராக் பொறுப்பாகவும் அதேசமயம் அதிரடியாகவும் பேட்டிங் செய்து 3 பவுண்டரி 4 சிக்சருடன் 56* (31) ரன்கள் விளாசி கடைசி வரை அவுட்டாகாமல் போராட்ட பினிஷிங் கொடுத்தார். பெங்களூர் சார்பில் அதிகபட்சமாக பந்துவீச்சில் ஹேசல்வுட், சிராஜ், ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

சொதப்பிய பெங்களூரு:
அதை தொடர்ந்து 145 என்ற எளிய இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு இம்முறை தொடக்க வீரராக களமிறங்கிய போதிலும் பார்மின்றி தவிக்கும் விராட் கோலி 9 (10) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் கேப்டன் டு பிளேஸிஸ் 3 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 23 (21) ரன்களில் அவுட்டானார். அந்த நிலைமையில் களமிறங்கிய கிளன் மேக்ஸ்வெல் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுக்க ராஜட் படிடார் 16 (16) ஷாபாஸ் அஹமட் 17 (27) பிரபுதேசாய் 2 (7) போன்ற இளம் வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெங்களூருவுக்கு மேலும் பின்னடைவை கொடுத்தனர்.

அந்த இக்கட்டான நிலைமையில் கடந்த போட்டிகளில் பினிஷராக செயல்பட்டு காப்பாற்றிய தினேஷ் கார்த்திக்க்கும் இம்முறை துரதிர்ஷ்டவசமாக 6 (4) ரன்களில் ரன் அவுட்டாக பெங்களூருவின் தோல்வி உறுதியானது. இறுதியில் ராஜஸ்தானின் அற்புதமான பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாத அந்த அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்களுக்கு சுருண்டது. ராஜஸ்தான் சார்பில் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்ட குல்தீப் சென் 4 விக்கெட்டுகளையும் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

- Advertisement -

வெடித்த சண்டை:
இந்த வெற்றியால் பங்கேற்ற 8 போட்டிகளில் 6-வது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் புள்ளி பட்டியலில் மீண்டும் முதல் இடம் பிடித்தது. மறுபுறம் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டாலும் பேட்டிங்கில் சொதப்பிய பெங்களூரு 9 போட்டிகளில் 4-வது தோல்வியை பதிவு செய்து 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. ராஜஸ்தானின் இந்த மிகச்சிறப்பான வெற்றிக்கு பேட்டிங்கில் தனி ஒருவனை போல் 56* (31) ரன்கள் விளாசி முக்கிய பங்காற்றிய இளம் வீரர் ரியன் பராக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

RCB vs RR

முன்னதாக இந்த போட்டியில் 106/6 என சரிந்த ராஜஸ்தானின் தோல்வி உறுதியான நிலையில் கடைசி நேரத்தில் பட்டாசாக பேட்டிங் செய்த ரியன் பராக் அதிரடியாக ரன்களை குவித்தார். குறிப்பாக பெங்களூருவின் நட்சத்திர பவுலர் ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரில் 4, 2, 6, 6 என மிரட்டலான பவுண்டரிகளை தெறிக்கவிட்ட அவர் 18 ரன்களை குவித்து ராஜஸ்தானை தூக்கி நிறுத்தினார்.

- Advertisement -

அதன் காரணமாக அந்த இருவருக்குமிகிடையே விரிசல் ஏற்பட்ட நிலையில் முதல் இன்னிங்ஸ் முடிந்து ரியன் பரக் பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்தபோது அவரின் அருகே வந்த ஹர்ஷல் படேல் ஏதோ கூறியது போல் தெரிகிறது. அதனால் கோபமடைந்த ரியன் பராக் பதிலுக்கு ஏதோ கூறப்போய் இறுதியில் இருவருக்கும் மைதானத்தில் சண்டை வெடித்தது. நல்ல வேளையாக அது கைகலப்பாக மாறுவதற்கு முன் ஒருசிலர் உள்ளே புகுந்து இருவரையும் தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்தனர்.

கைகொடுக்காத ஹர்ஷல் படேல்:
அதை தொடர்ந்து பேட்டிங் செய்த பெங்களூருவுக்கு 19.3-வது பந்தில் ஹர்ஷல் படேல் தான் கடைசி பேட்ஸ்மேனாக அவுட்டானார். அந்த நிலைமையில் போட்டி முடிந்த பின் வழக்கம் போல இரு அணியினரும் கைகொடுக்க வந்த நிலையில் சண்டையையும் மறந்த ரியன் பரக் அவரிடம் கைகொடுத்தார்.

இதையும் படிங்க : உலகக்கோப்பை இந்திய டி20 அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பிடிக்க வாய்ப்பில்லை. ஏன் தெரியுமா? – சஞ்சய் மஞ்சரேக்கர்

ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத ஹர்ஷல் படேல் கை கொடுக்க மறுத்துவிட்டார். அவரைவிட வயதில் சிறிய ரியன் பராக் என்னதான் சண்டை இருந்தாலும் அதை மறந்து கைகொடுக்க வந்தபோதும் அதை வயதில் மூத்த ஹர்ஷல் படேல் ஏற்றுக்கொண்டு பெருந்தன்மையாக நடந்து கொள்ளாதது ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

Advertisement