தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்த 38 வயது வீரர் யார்? – அவர் குறித்த சுவாரசிய தகவல் இதோ

Van-Der-Merwe
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2023-ஆம் ஆண்டுக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது சுவாரஸ்யமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சிறிய அணிகளாக கருதப்படும் அணிகள் கூட பெரிய அணிகளை வீழ்த்துவதால் இந்த தொடரானது தற்போது மேலும் சுவாரசியத்தை பெற்றுள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற 15-வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி தென்னாப்பிரிக்க அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது.

அதன்படி நேற்று தர்மசாலா நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணியானது நிர்ணயிக்கப்பட்ட 43 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்களை குவிக்க பின்னர் 246 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 42.5 ஓவர்களில் 207 ரன்கள் மட்டுமே குவித்து ஆட்டமிழந்தது.

- Advertisement -

இதன் காரணமாக நெதர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்த முக்கிய காரணமாக நெதர்லாந்து அணியின் சீனியர் வீரரான வான்டெர்மெர்வ் திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல.

ஏனெனில் பேட்டிங்கின் போது 19 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 29 ரன்களையும் பந்துவீச்சில் 9 ஓவர்களை வீசிய அவர் 34 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். இப்படி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் கலக்கிய வான்டெர்மெர்வ் குறித்த சுவாரஸ்ய தகவலை தான் நாங்கள் இங்கு உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

- Advertisement -

அதன்படி தற்போது 38 வயதாகும் வான்டெர்மெர்வ் நெதர்லாந்து அணிக்காக விளையாடி வந்தாலும் ஆரம்பத்தில் இவர் ஏற்கனவே தென்னாப்பிரிக்கா அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 2009-ஆம் ஆண்டே அறிமுகமாகி 26 போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார். ஜோகன்னஸ்பர்க் நகரில் கடந்த 1984-ஆம் ஆண்டு பிறந்த அவர் 19 வயதுக்குட்பட்டோர் தென்னாப்பிரிக்க அணியிலும் விளையாடி அசத்தலான செயல்பாடுகளை வெளிப்படுத்தி தென்னாப்பிரிக்க அணிக்காகவும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியிருந்தார்.

இதையும் படிங்க : பக்காவா பிளான் போடுறேனு. முக்கிய இடத்தில் கோட்டை விட்ட தெம்பா பவுமா – தோல்விக்கு காரணமான முடிவு

ஆனால் கடந்த 2015-ஆம் ஆண்டு அங்கிருந்து சில காரணங்களுக்காக நெதர்லாந்துக்கு கூடியேறிய அவர் அதன் பின்னர் நெதர்லாந்து அணிக்காக தற்போது விளையாடி வருகிறார். 38 வயதான அனுபவ வீரரான வான்டெர்மெர்வ் இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 19 ஒருநாள் போட்டிகள் மற்றும் 51 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள வேளையில் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் கூட 21 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement