பக்காவா பிளான் போடுறேனு. முக்கிய இடத்தில் கோட்டை விட்ட தெம்பா பவுமா – தோல்விக்கு காரணமான முடிவு

Bavuma
- Advertisement -

தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நேற்று அக்டோபர் 17-ஆம் தேதி தர்மசாலா நகரில் நடைபெற்ற நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 15-வது லீக் ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நெதர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது. இந்த உலகக்கோப்பை தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை அசத்தலாக வீழ்த்திய தென்னாபிரிக்க அணியானது வெற்றிநடை போட்டது.

அதிவேகத்தில் நெதர்லாந்து அணியையும் வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் அந்த அணி அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

- Advertisement -

ஆனாலும் போட்டி துவங்கும் முன்னர் மழை பெய்ததால் ஆட்டம் 43 ஓவராக குறைக்கப்பட்டது. அப்படி 43 ஓவர்கள் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய நெதர்லாந்து அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் குவித்தது.

பின்னர் 246 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக நெதர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி அசத்தியது. இதன்காரணமாக தென்னாப்பிரிக்க அணி இந்த தொடரில் முதல் தோல்வியை சந்தித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் பெற்ற தோல்விக்கு தெம்பா பவுமா எடுத்த ஒரு முடிவும் காரணமாக அமைந்ததாக பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சுழற்ப்பந்து வீச்சாளர் ஷம்ஸி மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அசத்தியிருந்த வேளையில் அவரை இந்த போட்டியில் இருந்து நீக்கி அணியில் நான்காவது வேகப்பந்து வீச்சாளராக ஜெரால்டு கோட்சியை மீண்டும் தெம்பா பவுமா இணைத்திருந்தார். அவரது இந்த முடிவே அவர்களுக்கு பாதகமாக அமைந்தது.

இதையும் படிங்க : தோத்ததை கூட ஏத்துக்கலாம். ஆனா இதை ஏத்துக்க முடியாது. தெ.ஆ அணி செய்த தவறை – சுட்டிக்காட்டிய நிபுணர்கள்

ஏனெனில் நேற்றைய போட்டியின் போது நெதர்லாந்து அணியின் வீரர்கள் வேகப்பந்து வீச்சாளர்களை ஓவருக்கு சுமார் 6 ரன்கள் வீதத்தில் அடித்தனர். ஆனால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக 4 ரன்கள் வீதத்தில் மிகவும் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனவே ஷம்ஸி இருந்திருந்தால் எதிரணியின் ரன் குவிப்பை தடுத்திருக்கலாம் என்றும் விக்கெட்டும் கிடைத்திருக்கும் என்றும் பலராலும் பேசப்படுகிறது. பாவுமா மைதானத்தை கணக்கில் கொண்டு இந்த முடிவை எடுத்திருந்தாலும் அந்த முடிவே தோல்விக்கு காரணமாகவும் அமைந்ததாகவும் ரசிகர்கள் அவர் செய்த தவறை சுட்டிக்காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement