டி20 உலகக்கோப்பை : சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை தெரியுமா ? – விவரம் இதோ

Cup
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது 14-வது ஐபிஎல் தொடரானது நடைபெற்று வருகிறது. இன்னும் சில தினங்களில் இந்த தொடர் முடிவடைய உள்ளன. அதன் பின்னர் அடுத்த சில நாட்களிலேயே ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இந்தியாவில் நடைபெற இருந்த இந்த உலககோப்பை தொடர் கொரோனா பரவல் காரணமாக தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

cup

- Advertisement -

இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்க உள்ளதால் இந்தப் தொடரின் மீதான எதிர்பார்ப்பு உலகளவில் உள்ள ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் உள்ளது. மேலும் இந்த தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற போகும் அணி எது ? என்பது குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கிடைக்கும் பரிசு தொகை குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி மிகச்சிறந்த தொடராக உலகளவில் பார்க்கப்படும் இந்த உலகக் கோப்பை தொடரானது நிச்சயம் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும். அதுமட்டுமின்றி இந்த தொடரில் கோப்பையை வெல்லும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 12 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளது என்று கூறப்படுகிறது.

Cup

அதுமட்டுமின்றி இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 8 லட்சம் அமெரிக்க டாலர்களும், அரையிறுதி போட்டியில் தோல்வியைத் தழுவும் இரு அணிகளுக்கு 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும் உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி சூப்பர் 12 பிரிவுகளில் தோல்வியை தழுவும் அணிகளுக்கும் பரிசு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

- Advertisement -

இதையும் படிங்க : ஐ.பி.எல் வரலாற்றில் மிகவும் மோசமான சாதனையை படைத்த பஞ்சாப் கிங்ஸ் அணி – சுவாரசிய தகவல் இதோ

அதுமட்டுமின்றி தற்போது ஐபிஎல் தொடரில் நடைமுறையில் இருக்கும் டைம் அவுட் முறை போன்று இந்த உலகக் கோப்பைத் தொடரிலும் ஒவ்வொரு போட்டியின் போதும் இன்னிங்ஸ்களுக்கு மத்தியில் இரண்டரை நிமிடம் ட்ரிங்ஸ் பிரேக் அளிக்கப்பட உள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி தகவலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement