அதுக்குள்ள அடுத்த ஐ.பி.எல் ஏலமா? அதற்கு கொண்டு வரப்பட்ட விதிமுறைகள் – என்னென்ன?

Auction
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் தொடரானது இதுவரை 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ள வேளையில் அடுத்ததாக எதிர்வரும் 16-வது ஐபிஎல் தொடரானது அடுத்த மார்ச் மாதம் இறுதியில் துவங்க உள்ளது. இதில் பங்கேற்க உள்ள 10 அணிகளும் உள்ளூர் மற்றும் வெளியூர் மைதானங்களில் தலா இரண்டு போட்டிகளில் மோதும் என்கிற அடிப்படையில் அட்டவணை அமைக்கப்படும் என்று ஏற்கனவே இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அறிவித்திருந்தது.

IPL 2022 (2)

- Advertisement -

இந்நிலையில் எதிர்வரும் அடுத்த ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் டிசம்பர் 16-ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளது என கிரிக்கெட் வாரியத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணிகளும் தங்கள் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை நவம்பர் 15 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

அதனை தொடர்ந்து வீரர்களின் ஏலமும் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ஏலத்திற்காக குறிப்பிட்ட சில விதிமுறைகளையும் பிசிசிஐ வகுத்துள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு அணிகளும் 15 வீரர்களை தக்க வைத்துக் கொண்டு மீதமுள்ள வீரர்களை ஏலத்தில் விட வேண்டும்.

CSK-Auction

அப்படி ஏலத்தில் விடும்போது கடந்த 15 ஆண்டுகளாக ஒவ்வொரு அணிக்கும் ஒதுக்கப்பட்ட 90 கோடி என்கிற மொத்த தொகையிலிருந்து தற்போது கூடுதலாக 5 கோடி உயர்த்தப்பட்டு 95 கோடி வரை செலவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

ஆனாலும் பெரும்பாலான ஐபிஎல் உரிமையாளர்கள் 15 வீரர்களை தக்க வைத்துக் கொண்டு எஞ்சிய வீரர்களை ஏலத்தில் விட்டால் மிகக் குறைந்த அளவிலான பணமே அவர்களிடம் கையில் இருக்கும். எனவே ஒரு சில வீரர்கள் மட்டுமே இந்த ஏலத்தில் மற்ற அணிகளுக்காக மாற்றப்படுவார்கள் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : பயிற்சி போட்டியில் கூட இவ்வளவு பொறுப்பா இருக்கீங்களே! விராட் கோலியின் செயலை – பாராட்டும் ரசிகர்கள்

கடந்த ஏலத்திற்கு பிறகு பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்கு மட்டுமே முறையே 3.45 கோடி இரண்டு புள்ளி 2.95 கோடி மீதம் வைத்துள்ளனர். மற்ற அணிகள் அனைத்தும் மொத்த தொகையையும் தீர்த்து விட்டதால் இந்த ஏலத்தில் பெரிய அளவில் வீரர்களில் மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement