இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்ப்பினை பெற்று வரும் வேளையில் இந்த ஆண்டு 18-வது ஐபிஎல் தொடரானது கடந்த மார்ச் 22-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இந்த தொடரில் இறுதிவரை சென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள அனைத்து அணிகளிலும் பல திறமையான இளம் வீரர்கள் இடம் பிடித்துள்ளதால் அவர்களின் செயல்பாடுகள் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
மும்பை அணிக்காக அசத்திய அஸ்வனி குமார் குறித்த விவரங்கள் :
அந்த வகையில் இதுவரை நடைபெற்று முடிந்த லீக் போட்டிகளில் ஒரு சில அணிகளை சேர்ந்த இளம் வீரர்கள் பெருமளவு கவனத்தை ஈர்த்து வருகின்றனர். அந்த வகையில் ஹைதராபாத் அணியை சேர்ந்த அனிகீத் வர்மா, ஸீஸன் அன்சாரி போன்றோர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். அதேபோன்று டெல்லி அணிக்காக விப்ராஜ் நிகம், லக்னோ அணிக்காக பிரின்ஸ் யாதவ், பஞ்சாப் அணிக்காக பிரியான்ஷ் ஆர்யா என பல இளம் வீரர்கள் இந்த தொடரில் கலக்கி வருகின்றனர்.
அந்த வகையில் மும்பை அணிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது அறிமுகமான விக்னேஷ் புதூர் தனது அறிமுகபட்டிலேயே சென்னை அணிக்கு எதிராக சிறப்பன பந்துவீச்சை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். அதனை தொடர்ந்து கொல்கத்தா அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியின் போது மும்பை அணிக்காக அறிமுகமான 23 வயதான வேகப்பந்து வீச்சாளரான அஸ்வனி குமார் தனது முதல் போட்டியிலே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐபிஎல் தொடரின் அறிமுக போட்டியில் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய வீரர் என்ற சாதனையும் படைத்திருந்தார்.
இந்நிலையில் அஸ்வனி குமாரை மும்பை அணி எங்கிருந்து கொண்டு வந்தது? யார் இந்த அஸ்வனி குமார்? என்பது குறித்த ஒரு சில சுவாரஸ்ய தகவலை இந்த பதிவில் காணலாம். அந்த வகையில் 23 வயதான இளம் வீரரான அஸ்வனி குமார் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மொஹாலியில் பிறந்து வளர்ந்தவர். கடந்த 2022 ஆம் ஆண்டு சையத் முஸ்டாக் அலி தொடரில் பஞ்சாப் அணிக்காக அறிமுகமான அவர் பெரிய அளவில் பஞ்சாப் அணிக்காக விளையாடியது கிடையாது.
இதுவரை பஞ்சாப் அணிக்காக வெறும் 4 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர் 2 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார். அதேபோன்று ரஞ்சி தொடரிலும் 2 ஆட்டங்கள், விஜய் ஹசாரே தொடரில் 3 ஆட்டங்கள் என வெகு சில ஆட்டங்களில் மட்டுமே விளையாடி இருந்தார். ஆனாலும் இவரை மும்பை அணி கொண்டு வர காரணம் யாதெனில் :
இதையும் படிங்க : ஜோக் சூரியகுமார் மாதிரி என்னால் முடியாது.. நல்லவேளை எங்க பக்கம் இருக்காரு.. தெ.ஆ வீரர் ரிக்கல்டன் பேட்டி
பஞ்சாபில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஷெர்-இ-டி20 டிராபி தொடரில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவரை மும்பை அணி அடையாளம் கண்டது. அதனை தொடர்ந்து அவரை கொண்டு வந்து அவர்களது பயிற்சியில் ஈடுபட்ட வைத்த போது அவரிடம் வைடு யார்க்கர், பவுன்சர் போன்ற பல்வேறு வேரியேஷன்கள் இருந்ததால் அவரை தேர்வுசெய்ய நினைத்தது. அதோடு இடதுகை வேகப்பந்து வீச்சாளராகவும் இருந்ததால் அவரை மெருகேற்றி 30 லட்சம் ரூபாய்க்கு ஏலத்திலும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.



