ஜோக் சூரியகுமார் மாதிரி என்னால் முடியாது.. நல்லவேளை எங்க பக்கம் இருக்காரு.. தெ.ஆ வீரர் ரிக்கல்டன் பேட்டி

Ryan RIckelton
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு வழியாக தங்களுக்கு முதல் வெற்றியைப் பெற்று அசத்தியது. இந்த வருடம் சென்னை மற்றும் குஜராத்துக்கு எதிராக மும்பை தங்களது முதல் 2 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தது. இருப்பினும் மார்ச் 31ஆம் தேதி தங்களுக்கு சொந்த ஊரில் நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் மும்பை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா மோசமாக பேட்டிங் செய்து 16.2 ஓவரில் 116 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ரகுவன்சி 26 ரன்கள் எடுத்த மும்பைக்கு அதிகபட்சமாக இளம் வீரர் அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக விளையாடிய மும்பைக்கு ரோஹித் சர்மா 13, வில் ஜேக்ஸ் 16 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.

- Advertisement -

360 டிகிரி சூரியகுமார்:

இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் ரியான் ரிக்கல்டன் அதிரடியான அரை சதத்தை அடித்து 62 ரன்கள் எடுத்தார். அவருடன் மிடில் ஆர்டரில் களமிறங்கி அதிரடி காட்டிய சூரியகுமார் 27* (9) ரன்கள் விளாசினார். அதனால் 12.5 ஓவரிலேயே 121-2 ரன்களை எடுத்த மும்பை அசத்தல் வெற்றி பெற்றது. கொல்கத்தாவுக்கு ரசல் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

முன்னதாக ஆண்ட்ரே ரசலுக்கு எதிராக தான் எதிர்கொண்ட தனது முதல் பந்திலேயே சூரியகுமார் சிக்ஸர் பறக்க விட்டார். குறிப்பாக கொஞ்சம் முன்னே வந்த சூரியகுமார் ஸ்கூப் ஷாட்டின் வாயிலாக ஃபைன் லெக் திசையில் அற்புதமான சிக்சரை பறக்க விட்டார். அதே போல 3 பவுண்டரி 2 சிக்சர்களை தனது ஸ்டைலில் அடித்த அவர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்பதையும் இன்றும் மீண்டும் மீண்டும் காண்பித்தார்.

- Advertisement -

என்னால முடியாது:

இந்நிலையில் சூரியகுமார் பேட்டிங் கிரிக்கெட்டை தாண்டி நம்ப முடியாத நகைச்சுவை போல் இருப்பதாக அவருடன் விளையாடியது தென்னாப்பிரிக்க வீரர் ரியான் ரிக்கல்டன் கூறியுள்ளார். மேலும் சூரியகுமார் போல தம்மால் விளையாட முடியாது என்றும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சூரியகுமார் நகைச்சுவை போன்றவர் குவிண்டன் டீ காக்’கிடம் சொன்னேன்”

இதையும் படிங்க: ஆண்ட்ரே ரசலுக்கு அடுத்து சூரியகுமார் யாதவ் தான்.. டி20 கிரிக்கெட்டில் அசத்தல் சாதனை நிகழ்த்திய – மிஸ்டர் 360

“அவர் செய்யும் விஷயங்களை என்னால் செய்வதுப் பற்றி கனவுக் கூட காண முடியாது. அந்த ஷாட்டை அவர் பலமுறை விளையாடியுள்ளார். ஆனால் நான் அதை விளையாட முயற்சிக்கப் போவதில்லை. அவர் எங்கள் அணியில் இருப்பதில் மகிழ்ச்சி” என்று கூறினார். இதை தொடர்ந்து மும்பை தங்களது அடுத்த போட்டியில் ஏப்ரல் நான்காம் தேதி லக்னோவை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement