மண்டியிட்டு காதலை வெளிப்படுத்திய தீபக் சாஹர். அவருடைய காதலி யார் தெரியுமா ? – முழுவிவரம் இதோ

Jaya-Bhardwaj
- Advertisement -

துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற 53-வது லீக் போட்டியில் லீக் போட்டியில் பஞ்சாப் அணி மற்றும் சென்னை சிஎஸ்கே ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை அணி நிர்ணயித்த 135 ரன்கள் இலக்கினை பஞ்சாப் அணி 13 ஓவர்களிலேயே விரட்டி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்ததும் மைதானத்தின் விஐபி-ஸ்டேன்ட்ஸ்க்கு சென்ற தீபக் சாஹர் அங்கிருந்த தனது தோழியிடம் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு ப்ரபோஸ் செய்தார். அதுமட்டுமின்றி மோதிரம் மாற்றி நிச்சயதார்மும் செய்து கொண்டார்.

அவரது இந்த செயலால் அரங்கமே அதிர்ந்தது. மேலும் அவரது இந்த ப்ரபோஸை சற்றும் எதிர்பாராத அவரது காதலி சந்தோஷத்தில் மூழ்கினார். மேலும் அவரது இந்த செயல் தற்போது இணையத்தில் வைரலாக தீபக் சாகரின் காதலி யார் ? என்ற தேடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அது குறித்த தகவலை தான் நாங்கள் இந்த பதிவில் உங்களுக்காக வழங்கியுள்ளோம்.

- Advertisement -

அதன்படி நேற்று தீபக் சாஹர் ப்ரபோஸ் செய்த அவரது காதலின் பெயர் : ஜெயா பரத்வாஜ் நீண்ட காலம் நண்பர்களாக இருந்த இவர்கள் தற்போது தங்களது காதலை வெளிப்படுத்தியுள்ளனர். ஜெயா பரத்வாஜ் பிக் பாஸ் 5 கன்டஸ்டன்ட் சித்தார்த் பரத்வாஜின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயா மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் நீண்ட நாட்களாகவே டேட்டிங் செய்து வந்தனர் என்று கிசுகிசுக்கப்பட்ட வேளையில் தற்போது அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் இந்த ப்ரபோஸலை செய்துள்ளார். அதுமட்டுமின்றி கடந்த இரண்டு மாதமாகவே சென்னை அணியின் பயோ பபுளில் இணைந்து இருக்கும் ஜெயா, தீபக் சாஹர் உடனே ஐக்கிய அரபு அமீரகம் வந்து தற்போது நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியை உற்சாகப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனியோட இந்த பதில் ரொம்ப வித்தியாசமா இருக்கு. தோனியின் ஓய்வு குறித்து பேசிய – ஷேன் வாட்சன்

டெல்லியை பூர்வீகமாகக் கொண்ட ஜெயா அங்கு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே மைதானத்தில் இது போன்று பல ப்ரபோசல்கள் நடைபெற்று இருக்கும் வேளையில் கிரிக்கெட் வீரர் ஒருவரும் இதேபோன்று செய்துள்ளது பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி இணையத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement