தோனியோட இந்த பதில் ரொம்ப வித்தியாசமா இருக்கு. தோனியின் ஓய்வு குறித்து பேசிய – ஷேன் வாட்சன்

Watson
- Advertisement -

சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தற்போது சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். தற்போது 40 வயதை கடந்த தோனி இன்னும் எத்தனை ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று உறுதியாக கூறமுடியாது. இந்நிலையில் அடுத்த ஆண்டும் தான் விளையாடுவதாக தோனி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். ஆனாலும் தோனியின் ஐபிஎல் ஓய்வு குறித்த பேச்சு இதுவரை சமூகவலைதளத்தில் அடங்கவில்லை.

dhoni 1

- Advertisement -

இந்நிலையில் நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது பேசிய தோனி : நான் அடுத்த ஆண்டு மஞ்சள் நிற உடையில் இருப்பேன். ஆனால் அணியில் விளையாடுவேனா என்பது தெரியாது என்று புதிரான ஒரு பதிலை அளித்து இருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது. ஏனெனில் அவர் அணிக்காக விளையாடாமல் நிர்வாகத்தில் ஏதாவது ஒரு பொறுப்பில் இருப்பாரா ? என்பது போன்ற கேள்வி எழுந்துள்ளது.

அதுமட்டுமின்றி தோனி பேசுகையில் : அடுத்த ஆண்டு 10 அணிகள் இடம் பெற உள்ளதால் நிச்சயம் அணி தேர்வில் சிக்கல் இருக்கும் என்றும் வீரர்களின் இடம் எவ்வாறு அமையும் என்பது தெரியாது என்றும் பேசியிருந்தார். இதன் காரணமாக தற்போது தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்று விடுவாரோ ? என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆனாலும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் ஆன்லைன் மூலமாக பங்கேற்ற தோனி : அவருடைய பிரியா விடை போட்டி சென்னையில் தான் இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.

dhoni 1

இப்படி தோனியின் கருத்துகள் ஒவ்வொன்றும் முன்னுக்குப்பின் முரணாக இருக்க அவர் அடுத்த ஆண்டு விளையாடுவாரா ? என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான ஷேன் வாட்சன் தனது கருத்தினை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : தோனி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின்போது பேசியது எனக்கு வித்தியாசமாக தெரிந்தது. அவரது பதில் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது என்று கூறினார்.

- Advertisement -

இதையும் படிங்க : மும்பை அணி தலைகீழ நின்னாலும் பிளேஆப்புக்கு போகாது – எப்படி தெரியுமா ? – முழுவிவரம் இதோ

ஏனெனில் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடைபெறும் போது நிச்சயம் அடுத்த ஆண்டு விளையாடுவேன் என்று உறுதியாக கூறி இருந்தார். அதன் காரணமாகவே அவர் இந்த ஆண்டு விளையாடி வருகிறார். ஆனால் தற்போது அவர் கூறியிருப்பதை பார்க்கும்போது அந்த பதிலில் ஒரு உறுதி இல்லை என்று தோன்றுவதாக தெரிகிறது. இருப்பினும் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெறுமாயின் தோனி நிச்சயம் இடம் பெறுவார் என்றும் சென்னை மைதானத்தில் தான் அவர் ஓய்வினை அறிவித்து விடைபெற வேண்டும் என்பதே பல கோடி ரசிகர்களின் ஏக்கமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement