மும்பை அணி தலைகீழ நின்னாலும் பிளேஆப்புக்கு போகாது – எப்படி தெரியுமா ? – முழுவிவரம் இதோ

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் 14-வது ஐபிஎல் தொடரானது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த தொடரின் எஞ்சிய கடைசி இரண்டு லீக் போட்டிகள் இன்று நடைபெற உள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஒரு போட்டியிலும், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மற்றொரு போட்டியிலும் மோத இருக்கின்றன. இந்த தொடரில் ஏற்கனவே டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய மூன்று அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன.

IPL
IPL Cup

அதனையடுத்து நான்காவதாக எஞ்சியுள்ள இடத்திற்கு கொல்கத்தா அணி கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது என்றே கூறலாம். ஆனால் மும்பை அணிக்கு இன்னும் ஒரு போட்டி மீதமுள்ளதால் இன்று எந்த அணி தகுதிபெறப்போகிறது என்பது குறித்த முடிவு தெரிந்துவிடும். இருப்பினும் தற்போது வெளியான விவரம் படி மும்பை அணி பிளேஆப்-க்கு செல்ல வாய்ப்பே கிடையாது என்று கூறப்படுகிறது.

ஏனெனில் கொல்கத்தா அணி தற்போது 14 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் தற்போது நீடிக்கிறது. மேலும் அந்த அணியின் ரன் ரேட் +0.587 என்ற விகிதத்தில் உள்ளது. மும்பை அணி 13 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்று 12 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. இன்றைய போட்டிகள் அவர்கள் வெற்றி பெற்றாலும் 14 புள்ளி ஆகுமே தவிர ரன்ரேட் கொல்கத்தா அணிக்கு நிகராக வராது.

- Advertisement -

mi 1

அதுமட்டுமின்றி இன்றைய போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 170 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தினால் மட்டுமே அவர்களால் கொல்கத்தா அணியை மிஞ்ச முடியும். மாறாக இரண்டாவது பேட்டிங் என்றால் பிளேஆப்புக்கு வாய்ப்பே கிடையாது என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : இப்போவும் நான் நம்புறேன். நிச்சயம் நீங்க டி20 வேர்ல்டுகப்புல விளையாடுவீங்க – இளம்வீரருக்கு ஹர்பஜன் ஆறுதல்

- Advertisement -

இதன் காரணமாக நிச்சயம் கொல்கத்தா அணி தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பது உறுதியாகியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியானது இம்முறை ஹாட்ரிக் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் டெல்லி, சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே கோப்பையை கைப்பற்ற கடுமையான போட்டி நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement