யார் இந்த ஷேக் ரஷீத். 18 வயதே ஆன இந்த பிளேயரை சி.எஸ்.கே வாங்க என்ன காரணம்? – விவரம் இதோ

Shaik-Rasheed
Advertisement

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று டிசம்பர் 23-ஆம் தேதி 16-வது ஐபிஎல் தொடரின் மினி ஏலமானது கொச்சியில் நடைபெற்று முடிந்தது. இந்த மினி ஏலத்தில் பங்கேற்ற 400-க்கும் மேற்பட்ட வீரர்களில் இருந்து 80-க்கும் மேற்பட்ட வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள். அந்த வகையில் இந்த ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொண்ட சென்னை அணி இம்முறை குறிப்பிட்டு சில வீரர்களை வாங்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Shaik Rasheed

அந்த வகையில் 18 வயதான ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வீரர் ஷேக் ரஷீத்தை சென்னை அணி தேர்வு செய்துள்ளது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் யார் அந்த ஷேக் ரஷீத்? அவர் சென்னை அணிக்கு தேர்வாவதற்கு என்ன காரணம் என்பது குறித்து தேடல் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு காணப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் ஷேக் ரஷீத் குறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம். இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த அண்டர் 19 உலக கோப்பை தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இந்திய அணி கோப்பையை வெற்றி பெற முக்கியமான அந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 84 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார்.

Shaik Rasheed 1

பிப்ரவரி மாதம் நடைபெற்ற இந்த அண்டர் 19 உலகக்கோப்பை தொடரை கைப்பற்ற ஒரு முக்கிய காரணமாக (ஷேக் ரஷீத்) ஆல்ரவுண்டராக திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. அதை தொடர்ந்து அண்மையில் நடைபெற்று முடிந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த டி20 லீக் கிரிக்கெட் தொடரிலும் ஐந்து இன்னிங்ஸ்களில் 53 ரன்கள் சராசரி உடன் 159 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

அதோடு அந்த தொடர் முடிவடைந்த கையோடு சையத் முஷ்டாக் அலி தொடரிலும் இந்த ஆண்டு அறிமுகமான அவர் 27 பந்துகளில் 37 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். மேலும் 3 போட்டிகளில் விளையாடிய அவர் 56 ரன்கள் குவித்திருந்தார். இப்படி தொடர்ச்சியான சிறப்பான ஆட்டம் அவரிடம் இருந்து வெளிப்படவே ஆந்திர மாநில அணிக்காக இந்த ஆண்டு விஜய் ஹசாரே கோப்பையிலும் கலந்து கொண்டார்.

இதையும் படிங்க : எங்க கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்றிங்களே, வழக்கமாக சொதப்பிய பஞ்சாப் அணியை கலாய்க்கும் ரசிகர்கள் – காரணம் இதோ

ஆனால் விஜய் ஹசாரே கோப்பையில் சிறப்பாக செயல்பட தவறிய அவர் 14 ரன்கள் மட்டுமே குவித்தது மட்டுமின்றி பந்துவீச்சிலும் விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் இருந்தார். இருப்பினும் ஆல்ரவுண்டான இவர் 18 வயது நிரம்பியவர் என்பதனாலும் அண்டர் 19 கிரிக்கெட்டில் நல்ல அனுபவத்தை பெற்றுள்ளதாலும் நிச்சயம் இவரால் பெரிய அளவு சோபிக்க முடியும் என்பதற்காக சிஎஸ்கே அணி அவரை நம்பி ஏலத்தில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement