யார் இந்த குல்தீப் சென்? இந்திய அணியின் நெட் பவுலராக தேர்வுசெய்யப்பட என்ன காரணம் – விவரம் இதோ

Kuldeep-Sen
- Advertisement -

ஆசிய கண்டத்தினைச் சேர்ந்த ஆறு முக்கிய அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடரானது நாளை ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் செப்டம்பர் 11-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உட்பட ஆறு அணிகள் பங்கேற்று விளையாட இருக்கின்றன. கடந்த 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு இம்முறை நடைபெற உள்ள இந்த ஆசிய கோப்பை தொடரானது 50 ஓவர் போட்டிகளாக நடத்தப்படாமல் டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் 20 ஓவர் போட்டிகளாக நடைபெற இருக்கின்றன. இதன் காரணமாக இந்த தொடரை கைப்பற்றப்போகும் அணி எது என்பது குறித்து எதிர்பார்ப்பு தற்போதைய ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Asia-Cup

- Advertisement -

அதேபோன்று இந்த ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கும் அனைத்து அணிகளும் தற்போது ஐக்கிய அரபு அமீரகம் பயணித்து பயிற்சிகளை மேற்கொண்டு வரும் வேளையில் வரும் 28-ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் தற்போது உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் துபாய் சென்ற இந்திய அணியில் தீபக் சாகருக்கு காயம் ஏற்பட்டதாகவும் அவருக்கு பதிலாக மாற்றுவீரராக குல்தீப் சென் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்ற தகவலும் நேற்று இணையத்தில் வெளியாகி காட்டுத்தீயாக பரவியது.

இந்நிலையில் இந்த விவாகரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில் : தீபக்சாகர் காயம் அடைந்து விட்டார் என்ற செய்தி வெளியானது தவறான ஒன்று. இதுபோன்ற தவறான செய்திகளை பரப்ப வேண்டாம். தீபக் சாகர் தற்போது இந்திய அணியுடன் துபாயில் தான் உள்ளார். அவர் கடந்த இரண்டு நாட்களாக இந்திய அணி வீரர்களுடன் பயிற்சியும் செய்து வருகிறார்.

Kuldeep Sen 1

நல்ல உடல் தகுதியுடன் இருக்கும் அவரை நாங்கள் ஏன் நீக்க வேண்டும்? அவர் இந்திய அணியுடன் தான் உள்ளார் என்று பிசிசிஐ தரப்பில் தெளிவான தகவல் வெளியிடப்பட்டது. அதோடு குல்திப் சென் அணியில் இணைந்தது உண்மைதான் ஆனால் அவர் இந்திய அணியின் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக அதாவது நெட் பவுலராக அணியில் இணைந்துள்ளார் என்றும் அவர் முழு நேரமாக அணியில் தொடரும் வீரர் கிடையாது என்றும் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் நெட் பவுலராக இந்திய அணியில் இணைந்திருக்கும் குல்திப் சென் யார் என்பது குறித்த விவரத்தை தற்போது ரசிகர்கள் தேடி வருகின்றனர். அந்த வகையில் அதை தெளிவுபடுத்தும் விதமாக இந்த பதிவினை நாங்கள் வழங்கி உள்ளோம். இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2022 சீசனில் ராஜஸ்தான் அணிக்காக அறிமுகமாகிய குல்தீப் சென் லக்னோ அணிக்கு எதிராக கடைசி ஓவரில் 15 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலையில் சிறப்பாக பந்துவீசி ராஜஸ்தான் அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

kuldeep sen 1

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ரேவா மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர். அதோடு அவரது தந்தை உள்ளூரிலேயே சிறிய சலூன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். தனது 8 வயதில் இருந்தே கிரிக்கெட் மீது நாட்டம் உடைய குல்தீப் சென் பலரது உதவியுடன் சரியான பயிற்சிகளை மேற்கொண்டு மத்திய பிரதேச அணிக்காக அறிமுகமாகி தனது முதல் சீசனிலேயே 25 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

- Advertisement -

அதுமட்டும் இன்றி 16 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 44 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது இந்த சிறப்பான செயல்பாட்டை பார்த்த ராஜஸ்தான் அணி கடந்த ஆண்டு 20 லட்சம் ரூபாய் என்கிற அடிப்படை விலைக்கு அவரை ஏலத்தில் எடுத்து ஐ.பி.எல் தொடரில் விளையாடவும் வைத்தது.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை வரலாற்றில் தொடர் நாயகன் விருதுகளை வென்ற அனைத்து நாட்டு வீரர்களின் பட்டியல்

அவரும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு 7 போட்டிகளில் 8 விக்கெட் எடுத்து அசத்தினார். அதோடு மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசும் அவர் பல வேறியேஷன்களை தனது பந்து வீச்சில் வைத்துள்ளதால் அவரை இந்திய அணியின் நெட் பவுலராக தற்போது பிசிசிஐ சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement