CSK vs RR : சென்னை அணியை அலறவிட்ட துருவ் ஜூரெல். யார் இவர்? – முழுவிவரம் இதோ

Dhruv-Jurel
- Advertisement -

ஜெய்ப்பூர் நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 37-வது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 202 ரன்களை குவிக்கவே சென்னை அணி 203 என்கிற இலக்கினை துரத்திய வேளையில் 170 ரன்களை மட்டுமே குவிக்க இறுதியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

Jurel

- Advertisement -

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அந்த அணியின் துவக்க வீரரான ஜெய்ஷ்வால் 77 ரன்கள் குவித்து அதிரடி காட்டியதும், பின் வரிசையில் களமிறங்கிய துருவ் ஜுரல் 15 பந்துகளில் 34 ரன்கள் குவித்ததுமே காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் சஞ்சு சாம்சன், ஹெட்மயர் போன்ற அதிரடி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த வேளையில் 15 பந்துகளை சந்தித்த ஜுரல் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 34 ரன்கள் குவித்தது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சென்னை அணிக்கு எதிராக அதிரடியான ஆட்டத்தை ஆடிய இந்த துருவ் ஜுரல் யார்? என்ற தேடல் அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்நிலையில் அவர் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை நாங்கள் இங்கே உங்களுக்காக பகிர்ந்து உள்ளோம். அந்த வகையில் : இளம் வீரரான ஜுரெல் அதிரடியாக விளையாடக் கூடியவர் என்பது முன்னரே பலருக்கு தெரிந்திருக்கலாம்.

Jurel 1

அந்த வகையில் கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோர் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கேப்டன் பிரியம் கார்க்கிற்கு உதவியாக துணை கேப்டனாக இருந்தவர்தான் இந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜுரெல். இவரது அதிரடியான பேட்டிங் அப்போதே பலரது மத்தியிலும் வரவேற்பு பெற்றது. அதோடு உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர் ஒரு ராணுவ வீரரின் மகன் என்பதும், கிரிக்கெட் மீது உள்ள ஆர்வம் காரணமாக இளம் வயதிலிருந்து இவர் தொடர்ச்சியாக கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொண்டு வந்திருக்கிறார்.

- Advertisement -

அதனால் அவர் மீது பலரும் கண் வைத்திருந்தனர். இந்நிலையில் 19 வயதுக்கு உட்பட உலகக்கோப்பைக்குப் பிறகு அவரது ஆட்டத்தை கவனித்த ராஜஸ்தான் அணி அவரை தங்களது கேம்ப்பிலும் இணைத்து பயிற்சி கொடுத்து வந்தது. அதனை தொடர்ந்து கடந்த ஐபிஎல் ஏலத்தில் 20 லட்ச ரூபாய்க்கு வாங்கிய அவருக்கு வாய்ப்பினை வழங்கவில்லை என்றாலும் இந்த ஆண்டு வாய்ப்பினை வழங்கியிருந்தது.

இதையும் படிங்க : IPL 2023 : டி20 மேட்ச்ல எப்டி விளையாடனும்னு தெரியாம தவிக்குறாரு – விராட் கோலியை விளாசும் மைக்கேல் வாகன், காரணம் என்ன

அதன்படி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஹெட்மயரை தாண்டி அவர் விளையாடிய ஆட்டமும் தற்போது சென்னை அணிக்கு எதிராக அவர் விளையாடிய ஆட்டமும் அவரை ரசிகர்கள் மத்தியில் பேசும் அளவிற்கு பெரிய வீரராக கொண்டு வந்துள்ளது. நேற்றைய போட்டியில் தனது குருவான தோனிக்கு முன்பாகவே அவர் ஆடிய ஆட்டம் அவருக்கே மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளதாக துருவ் ஜுரெல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement