IPL 2023 : டி20 மேட்ச்ல எப்டி விளையாடனும்னு தெரியாம தவிக்குறாரு – விராட் கோலியை விளாசும் மைக்கேல் வாகன், காரணம் என்ன

vaughan
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 4 வெற்றிகளையும் 4 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. குறிப்பாக கொல்கத்தாவுக்கு எதிராக சொந்த ஊரில் நடைபெற்ற போட்டியில் பந்து வீச்சில் வழக்கம் போல ரன்களை வாரி வழங்கி 200 ரன்களை கொடுத்த அந்த அணிக்கு பேட்டிங்கில் விராட் கோலி தவிர்த்து எஞ்சிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறியது தோல்வியை கொடுத்தது. சொல்லப்போனால் சேஸ் மாஸ்டர் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விராட் கோலியும் 6 பவுண்டரியுடன் 54 (37) ரன்கள் எடுத்தாலும் முக்கிய நேரத்தில் அவுட்டாகி ஃபினிஷிங் செய்ய தவறினார்.

RCB vs KKR

- Advertisement -

கடந்த 15 வருடங்களாக இந்தியாவுக்காக விளையாடி வரும் அவர் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்துள்ளார். பொதுவாகவே ஆரம்பத்தில் நிதானத்தை வெளிப்படுத்தி நங்கூரமாக நின்று நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி வெற்றி காண்பது விராட் கோலியின் ஸ்டைலாக இருந்து வருகிறது. ஆனால் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே அதிரடி காட்டினால் தான் வெற்றி பெற முடியும் என்ற இப்போதைய நவீன டி20 கிரிக்கெட்டில் அவருடைய அந்த அணுகுமுறை சில விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

விராட் கோலிக்கு தெரியல:
குறிப்பாக அதிரடியாக விளையாடி 40 ரன்கள் தொடும் அவர் அரை சதமடிக்க வேண்டும் என்பதற்காக அடுத்த 10 பந்துகளில் 10 ரன்கள் எடுப்பதாக முன்னாள் வீரர் சைமன் டௌல் சமீபத்தில் கடுமையாக விமர்சித்தார். அதே போல சஞ்சய் மஞ்ரேக்கர், மைக்கேல் வாகன் போன்ற முன்னாள் வீரர்களும் சமீபத்தில் விமர்சித்தது இந்திய ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. இந்நிலையில் பவர் பிளே முடிந்ததும் பவுண்டரிகள் அடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் விராட் கோலி பேட்டிங் செய்வதில்லை என்று முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் மீண்டும் விமர்சித்துள்ளார்.

Simon-Doull-and-Kohli

அதனாலேயே திறமை இருந்தும் ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுமாறும் விராட் கோலி நவீன டி20 கிரிக்கெட்டில் அதிரடி காட்ட முடியாமல் தவிப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி ஸ்பின்னர்களுக்கு எதிராக விளையாடுவதை நான் பார்க்க விரும்ப மாட்டேன் என்று சொல்வேன். இப்போதெல்லாம் நிறைய அணிகள் அவருக்கு எதிராக அதிக சுழல் பந்து வீச்சாளர்களை பயன்படுத்துகின்றன. ஏனெனில் ஸ்பின்னர்களுக்கு எதிராக அவருடைய ஸ்ட்ரைக் ரேட் வெறும் 107 என்று நினைக்கிறேன். அதனாலயே அவர் பேட்டிங் செய்யும் போது அதிக ஸ்பின்னர்கள் பந்து வீசுகிறார்கள்”

- Advertisement -

“குறிப்பாக 3 பவுண்டரிகளை பவுண்டரி எல்லை அருகே நிறுத்தி வைத்து அவரை மெதுவாக அடிக்க வைத்து அவுட்டாக்க நினைக்கிறார்கள். ஆனால் அந்த சமயத்தில் அவர் இறங்கி வந்து ஸ்பின்னர்களை மைதானத்திற்கு வெளியே அடிப்பதை நான் பார்க்க விரும்புகிறேன். டி20 கிரிக்கெட்டில் பவர்பிளே ஓவர்களுக்கு பின் அவருடைய மனநிலை 18வது ஓவர் வரை ஒரே மாதிரியாக இருக்கிறது. அதாவது அந்த சமயங்களில் அவர் தேவையான பவுண்டரிகளை அடிக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. எனவே டி20 கிரிக்கெட்டில் பவுண்டரிகள் மிகவும் முக்கியம் என்பதை அவர் உணர வேண்டும்”

Vaughan

“குறிப்பாக கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் பவர் பிளே ஓவர்களில் அவர் புல் ஷாட் அடித்தார். ஆனால் 6 ஓவர்கள் முடிந்த பின் அதே பந்துகளை லெக் சைட் திசையில் அடித்த அவர் அரிதாகவே பவுண்டரி அடிக்க முயற்சித்தார். இத்தனைக்கும் அவரிடம் பவர், டைமிங் ஆகியவற்றுடன் தற்போது சிக்ஸர் அடிக்க வேண்டும் என்று சூழ்நிலையும் இருந்தது”

இதையும் படிங்க:IPL 2023 : ரோஹித் சர்மா ஃபார்மை இழந்து ரொம்ப வருசமாச்சு, கேப்டனா இல்லனா கஷ்டம் தான் – முன்னாள் ஆஸி வீரர் விமர்சனம்

“எனவே மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எப்போதும் சரவெடியாக விளையாடுவார்கள் என்று உறுதியாக சொல்ல முடியாது என்பதால் நீங்கள் தொடர்ந்து சிக்சர்கள் அடிப்பதற்கு மனதளவில் தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக விராட் கோலி சில ரிஸ்க் எடுத்து அதிரடியாக விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன்” என்று கூறினார்.

Advertisement