IPL 2023 : ரோஹித் சர்மா ஃபார்மை இழந்து ரொம்ப வருசமாச்சு, கேப்டனா இல்லனா கஷ்டம் தான் – முன்னாள் ஆஸி வீரர் விமர்சனம்

Rohit
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 6வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் இதுவரை பங்கேற்ற 7 போட்டிகளில் 3 வெற்றிகளை மட்டும் பதிவு செய்து புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் தடுமாறுகிறது. முன்னதாக ஆரம்ப காலங்களில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தலைமை தாங்கியும் கோப்பையை வெல்ல முடியாத அந்த அணிக்கு 2013இல் கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா முதல் வருடத்திலேயே சாம்பியன் பட்டம் வென்று அபார சாதனை படைத்தார். அத்துடன் சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி எதிரணி பவுலர்களை பந்தாடிய அவரை ரசிகர்கள் ஹிட்மேன் என்றும் கொண்டாடினார்கள்.

Rohit Sharma

- Advertisement -

அத்துடன் பொல்லார்ட், மலிங்கா, பும்ரா, பாண்டியா சகோதரர்கள், ட்ரெண்ட் போல்ட் போன்ற தரமான வீரர்களை ஏலத்தில் வாங்கியதால் கிடைத்த முரட்டுத்தனமான அணியை அற்புதமாக வழி நடத்திய ரோஹித் சர்மா 2013 – 2020 வரையிலான காலகட்டத்தில் 5 கோப்பைகளை அசால்ட்டாக வென்று தோனியையும் மிஞ்சி வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்தார். அதனால் இன்று 3 வகையான இந்திய அணிக்கும் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி கேப்டனாவும் முன்னேறியுள்ள அவர் ஜாம்பவானாக போற்றும் அளவுக்கு சாதனைகளை படைத்துள்ளார்.

கேப்டனாக இல்லனா:
ஆனால் குஜராத் மற்றும் லக்னோ ஆகிய புதிய அணிகள் உருவாக்கப்பட்டதால் மெகா ஏலத்துக்காக அனைத்து அணிகளும் கலைக்கப்பட்ட போது பாண்டியா, போல்ட் போன்ற வீரர்களை மீண்டும் வாங்க தவறிய மும்பைக்கு மலிங்கா, பொல்லார்ட் போன்றவர்கள் ஓய்வு பெற்றதால் பின்னடைவு ஏற்பட்டது. அப்படி முக்கிய வீரர்கள் இல்லாததால் மேஜிக் கேப்டன்ஷிப் செய்ய முடியாமல் தவிக்கும் ரோஹித் சர்மா தலைமையில் கடந்த சீசனில் வரலாற்றில் முதல் முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்த மும்பை இந்த வருடமும் தடுமாறி வருகிறது.

Rohit Sharma vs KKR

மேலும் கடந்த வருடம் முதல் முறையாக ஒரு அரை சதம் கூட அடிக்காமல் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்த ரோகித் சர்மா இந்த சீசனிலும் ஒரு போட்டியை தவிர்த்து பழைய ஹிட்மேனாக தொடர்ந்து அதிரடி காட்ட முடியாமல் தடுமாறி வருகிறார். அத்துடன் 2020, 2021, 2022, 2023* சீசன்களில் முறையே 332, 381, 268, 181 என சமீப காலங்களாகவே அவர் குறைவான ரன்களை எடுத்து வருவது மும்பைக்கு பெரிய பின்னடைவாக அமைந்து வருகிறது.

- Advertisement -

அதனால் 5 கோப்பைகளை வென்ற கேப்டனாக இல்லாமல் போனால் ரோஹித் சர்மாவுக்கு மும்பை அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று சமீப காலங்களாகவே நிறைய ரசிகர்கள் வெளிப்படையாக விமர்சிக்கிறார்கள். அதை பிரதிபலிக்கும் வகையில் இந்த சீசன் மட்டுமல்லாமல் கடந்த 4 – 5 சீசன்களாகவே ஃபார்மின்றி தடுமாறி வருவதாக தெரிவிக்கும் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கேப்டன்ஷிப் அழுத்தம் தான் ரோகித் சர்மா தடுமாறுவதற்கு முக்கிய காரணம் என்று கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

Watson

“உங்களுடைய மன எனர்ஜியை நிர்வகிப்பது மிகப்பெரிய சவாலாகும். உலக அளவில் விளையாடும் சர்வதேச வீரர்கள் நிறைய போட்டிகளில் விளையாடுகிறார்கள். குறிப்பாக இந்திய வீரர்கள் வருடம் முழுவதும் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் விளையாடி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது இந்தியாவின் கேப்டனாகவும் இருக்கும் ரோகித் சர்மா முன்பை விட தடுமாற்றமாக செயல்படுகிறார்”

இதையும் படிங்க:IPL 2023 : பிரிதிவி ஷா போல உங்களால் சிஎஸ்கே அணிக்கு யூஸ் இல்ல, நட்சத்திர வீரரை விளாசிய கவாஸ்கர் – ரசிகர்களும் அதிருப்தி

“ஒருவேளை மனதளவில் அவர் தாக்கத்தை சந்தித்திருந்தால் அதை ஏன் என்று நீங்கள் பார்க்க வேண்டும். மேலும் ரோகித் சர்மாவை பொறுத்த வரை இந்த ஐபிஎல் மட்டுமல்லாமல் கடந்த 4 – 5 சீசன்களாகவே தொடர்ந்து சிறப்பாக செயல்பட முடியாமல் தவிக்கிறார். தற்சமயத்தில் இந்தியா மற்றும் ஐபிஎல் தொடரில் கேப்டன்ஷிப் அழுத்தத்துடன் விளையாடுவதால் அவர் ஃபார்முக்கு திரும்புவது கடினமாகும். இருப்பினும் அதிரடி வீரரான அவர் உலகின் பல்வேறு சூழ்நிலையில் சிறந்த பவுலர்களை சிறப்பாக எதிர்கொள்ளும் திறமை கொண்டவர்” என்று கூறினார்.

Advertisement