IPL 2023 : பிரிதிவி ஷா போல உங்களால் சிஎஸ்கே அணிக்கு யூஸ் இல்ல, நட்சத்திர வீரரை விளாசிய கவாஸ்கர் – ரசிகர்களும் அதிருப்தி

Sunil-Gavaskar
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெற்ற 37வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ராஜஸ்தான் 5வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 202/5 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக யசஸ்வி ஜெய்ஸ்வால் 8 பவுண்டரி 4 சிக்ஸருடன் 77 (43) ரன்களும் துருவ் ஜுரேல் 34 (15) ரன்கள் எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை தொடர்ந்து 203 ரன்களை துரத்திய சென்னைக்கு டேவோன் கான்வே தடுமாறி 8 (16) ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்திய நிலையில் மறுபுறம் அதிரடி காட்டிய ருதுராஜ் கைக்வாட் 47 (29) ரன்கள் குவித்து அவுட்டானர். ஆனால் அடுத்து வந்த ரகானே 15 (13) ரன்களில் அஸ்வின் சுழலில் அவுட்டான நிலையில் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ராயுடுவும் அதே ஓவரில் டக் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தார். அதனால் எகிறிய ரன் ரேட்டை கட்டுப்படுத்த முடியாமல் சிவம் துபே 52 (33) ரன்களும் மொய்ன் அலி 23 (12) ரன்களும் ஜடேஜா 23* (15) ரன்களும் எடுத்து போராடியும் ஃபினிஷிங் செய்ய தவறியதால் 20 ஓவர்களில் சென்னை 170/6 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

- Advertisement -

கவாஸ்கர் விமர்சனம்:
அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 3 விக்கெட்டுகளையும் அஸ்வின் 2 விக்கெட்களையும் எடுத்தனர். முன்னதாக இந்த போட்டியில் ரகானே அவுட்டானதும் முதல் இன்னிங்ஸில் ஃபீல்டிங் எதுவும் செய்யாமல் புத்துணர்ச்சியுடன் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ராயுடு கொஞ்சமும் பொறுப்பையும் நிதானத்தையும் வெளிப்படுத்தாமல் 2 பந்துகளில் டக் அவுட்டானது போட்டியில் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. கடந்த 2010 முதல் ஐபிஎல் தொடரில் மும்பை போன்ற பல்வேறு அணிகளுக்காக விளையாடி வரும் அவர் 2018இல் சென்னை அணிக்காக வாங்கப்பட்டு 602 ரன்கள் விளாசி 3வது கோப்பை விளாசி முக்கிய பங்காற்றினார்.

ஆனால் அப்போது ஆவலுடன் காத்திருந்த 2019 உலகக்கோப்பை வாய்ப்பு பறிபோனதால் மனமுடைந்த அவர் 2019இல் 282 ரன்கள் மட்டுமே எடுத்து 2020 சீசனில் 359 ரன்கள் குவித்தார். அதிலிருந்தே சரிவான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் 2021 சீசனில் 257 ரன்கள், 2022 சீசனில் 274 ரன்கள் என சமீப காலங்களாகவே சுமாராக செயல்பட்டு வரும் நிலையில் இந்த சீசனில் இதுவரை 7 இன்னிங்ஸில் 83 ரன்களை மட்டுமே எடுத்து சென்னை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறார்.

- Advertisement -

இத்தனைக்கும் 37 வயதை தாண்டி விட்டார் என்பதால் இதர அணிகளில் விக்கெட் கீப்பராக விளையாடிய அவர் சென்னை அணியில் தோனி இருந்ததால் சாதாரண வீரராகவே விளையாடிய நிலையில் இந்த சீசனில் பெரும்பாலான போட்டிகளில் இம்பேக்ட் வீரராக விளையாடும் வாய்ப்பை அணி நிர்வாகம் கொடுத்துள்ளது. இந்நிலையில் டெல்லி அணியில் இம்பேக்ட் வீரராக விளையாடியும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத பிரிதிவி ஷா போலவே சென்னை அணியில் ராயுடு எவ்வித பயனையும் ஏற்படுத்தாத செயல்பாடுகளை வெளிப்படுத்துவதாக முன்னாள் கவாஸ்கர் சாடியுள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் ஃபீல்டிங் செய்ய வேண்டும். மாறாக பேட்டிங் செய்வதற்காக மட்டும் களமிறங்கி முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாட முடியாது. உங்களால் இந்த வகையில் சிறப்பாக செயல்பட முடியாது. இதே நிலைமையை பிரிதிவி ஷா’விடம் பார்த்தோம். குறிப்பாக பேட்டிங் செய்வதற்காக மட்டும் களமிறங்கிய அவர் அணியின் வெற்றியில் எந்த பயனையும் ஏற்படுத்தவில்லை. அதாவது ஃபீல்டிங் செய்யாத நீங்கள் பேட்டிங்கிலும் அசத்த முடியாது. அதே போலவே ராயுடு 2வது பந்தில் டக் அவுட்டானார்” என்று கூறினார்.

இதையும் படிங்க:IPL 2023 : தோனி முன்கூட்டியே பேட்டிங் செய்ய களமிறங்காதது ஏன்? ரசிகர்களின் கேள்விக்கு ட்வயன் ப்ராவோ பதில் இதோ

அப்படி சமீப காலங்களாகவே சுமாராக செயல்பட்டு வரும் ராயுடு உள்ளூர் போட்டிகளிலும் விளையாடி நல்ல ஃபார்மில் இல்லை. அதனால் அடுத்த சீசனில் அவருக்கு பதில் வேறு வீரரை வாங்குமாறு சென்னை ரசிகர்களே சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

Advertisement