கர்மா வேலையை காட்டிடுச்சு, கங்குலியை வில்லனாக்கி குளிர் காய்ந்த தேர்வுக்குழு விலகலை – கொண்டாடும் விராட் கோலி ரசிகர்கள்

chetan sharma
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்ற 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா எதிர்பார்த்ததை போலவே நாக் அவுட் சுற்றில் சொதப்பி வெளியேறியது. அந்த தொடரில் விராட் கோலி, சூரியகுமார் ஆகியோரை தவிர்த்து கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட பெரும்பாலான சீனியர் கிரிக்கெட் வீரர்கள் சுமாராக செயல்பட்டதால் கடுப்பான ரசிகர்கள் அவர்களை கழற்றிவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய அணியை உருவாக்குமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர். அதற்கு செவி சாய்த்துள்ள பிசிசிஐ முதற்கட்டமாக சமீப காலங்களாகவே அணி தேர்வில் குளறுபடிகளை செய்து வரும் சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழுவை நேற்றிரவு கூண்டோடு நீக்கியுள்ளது.

1. அதை அறியும் விராட் கோலி ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள். ஏனெனில் 2017க்குப்பின் 3 வகையான கிரிக்கெட்டிலும் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி இருதரப்பு தொடர்களில் சக்கை போடு போட்டு இந்தியாவை வெற்றி நடை போட வைத்தார். ஆனாலும் உலக கோப்பையை வெல்லாத காரணத்தாலும் ஐபிஎல் கோப்பையை வெல்லாத காரணத்தாலும் இவர் கேப்டன்ஷிப் பதவிக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்ற விமர்சனங்கள் எழுந்தன.

- Advertisement -

2. அதே சமயம் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோகித் சர்மாவை குறைந்தபட்சம் டி20 கிரிக்கெட்டில் புதிய கேப்டனாக நியமிக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் எழுந்தன. அந்த நிலையில் துபாயில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்றாலும் இல்லாவிட்டாலும் டி20 பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த விராட் கோலி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்வதாக விரும்புவதாக தெரிவித்தார்.

3. ஆனால் அவரது தலைமையில் பாகிஸ்தானிடம் வரலாற்று தோல்வியை சந்தித்து லீக் சுற்றூடன் வெளியேறியதால் அதிருப்தியடைந்த இதே தேர்வுக்குழு வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் 2 கேப்டன்கள் தேவையில்லை என்பதை காரணமாக வைத்து விராட் கோலியின் ஒருநாள் கேப்டன்ஷிப் பதவியை வலுக்கட்டாயமாக பறித்து ரோகித் சர்மாவிடம் ஒப்படைத்தது.

- Advertisement -

4. ஆனால் அதை பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி எனும் ஆயுதம் தேர்வுக்குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு செய்ய வேண்டியிருந்தது. அதனால் விராட் கோலியின் கேப்டன்ஷிப் பதவி பறிபோவதற்கு சௌரவ் கங்குலி தான் காரணம் என்று சமீபத்தில் அவர் தலைவர் பதவியிலிருந்து வெளியேறிய போது அவரது ரசிகர்கள் விமர்சித்தார்கள். ஆனால் உண்மையாகவே எப்போதும் அதிரடியான முடிவுகளை எடுக்க தயங்காத சௌரவ் கங்குலி பழியை ஏற்றுக் கொண்டு தேர்வுக்குழுவின் பரிந்துரைக்கு கையெழுத்து போட்டதால் அவப்பெயருக்கு உள்ளானார்.

5. இருப்பினும் தற்போது சதமடித்து பார்முக்கு திரும்பி டி20 உலக கோப்பை அபாரமாக செயல்பட்டு தனது இடத்தை விராட் கோலி வலுப்படுத்தியுள்ளார். ஆனால் அவரை காலி செய்த தேர்வுக்குழுவும் கங்குலியும் இந்திய வாரியத்திலிருந்தே வெளியேறியதாக தெரிவிக்கும் அவரது ரசிகர்கள் இதுதான் கர்மா என்று கொண்டாடுகிறார்கள்.

- Advertisement -

சாதாரண ரோஹித்:

1. அத்துடன் புதிதாக பொறுப்பேற்கும் தேர்வுக்குழு ஒவ்வொரு வகையான கிரிக்கெட்டுக்கும் தரமான புதிய கேப்டனை நியமிப்பதே முதன்மை வேலையாக இருக்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் ஏதேனும் ஒரு வகையான கிரிக்கெட்டில் மட்டும் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட போகிறார் என்பது தெரிய வருவதால் அதையும் விராட் கோலி ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

2. ஏனெனில் இருதரப்பு தொடர்களில் அசத்திய விராட் கோலி உலகக் கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்பதே அவரது கேப்டன்ஷிப் மீதான விமர்சனமாகும். ஆனால் தற்போது புதிதாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா இருதரப்பு தொடர்களில் வழக்கமான வெற்றிகளை பெற்றாலும் அழுத்தமான ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பையில் வெற்றியை பதிவு செய்ய முடியாமல் சுமாரான கேப்டனாகவே செயல்பட்டார். அதனால் ஐபிஎல் தொடரில் தோனியை மிஞ்சினாலும் சர்வதேச கிரிக்கெட்டில் அவரை நெருங்க முடியாத ரோகித் சர்மாவும் சாதாரண கேப்டன் தான் என்று விராட் கோலி ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

3. முன்னதாக விராட் கோலி கூட 2017 – 2021 வரை நிலையான கேப்டனாக செயல்பட்டார். ஆனால் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ஒரு வருடத்திற்குள் வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு காலண்டர் வருடத்தில் 7 வெவ்வேறு கேப்டன்களை பயன்படுத்தும் அவலத்தை சந்திக்கும் அளவுக்கு சமீப காலங்களில் பெரும்பாலான தொடர்களில் ரோகித் சர்மா ஓய்வெடுத்து வருகிறார். அதனால் ஃபிட்டாக இருப்பதற்கு எடுத்துக்காட்டாக திகழும் விராட் கோலியே எவ்வளவோ பரவாயில்லை என்றும் ரசிகர்கள் கூறுகிறார்கள்.

Advertisement