ஸ்மித் விவகாரம்…ஆஸ்திரேலியா வீரர்களுக்கு சச்சின் சொன்ன அந்த ஒரு வார்த்த…என்ன தெரியுமா ?

tendulkar
- Advertisement -

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர் “நாம் வெற்றிபெற்றதை விட எப்படி வெற்றி பெற்றோம் என்பது தான் முக்கியம்” என்று எழுதியுள்ளார்.தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் கேமரூன் பேன்கிராப்ட் திட்டமிட்டு பந்தை சேதப்படுத்தியது வீடியோவில் அம்பலமானது.
sachin

முதலில் மறுத்த அவர் பின்னர் சகவீரர்களின் தூண்டுதலின் பெயரில் தான் இந்த சம்பவம் நடந்தது எனக்கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.இதன் பின்னர் செய்த தவறை ஒப்புக்கொண்டு கேப்டன் மற்றும் துணைக்கேப்டன் பதவியிலிருந்து ஸ்மித்தும் வார்னரும் பதவி விலகினர்.இந்நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்திய பின்னர் ஐசிசி ஆஸ்திரேலிய அணி கேப்டனிற்கு 100% அபராதத்தையும் மற்றும் ஒரு போட்டியில் விளையாட தடையும் விதித்தது.பந்தை சேதப்படுத்திய பந்துவீச்சாளரான கேமரூன் பேன்கிராப்ட்க்கு 75% அபராதம் மட்டும் விதித்தது.

- Advertisement -

இந்த பிரச்சனையை மிகவும் சீரியஸாக கவனத்தில் எடுத்துக்கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தற்போது ஸ்டீவன் ஸ்மித் மற்றும் வார்னருக்கு சர்வதேச கிரிக்கெட் விளையாட ஒரு வருட தடை விதித்தது.ஆஸ்திரேலிய நிர்வாகம் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஒரு வருட தடை விதித்த சற்று நேரத்தில் வரும் ஏப்ரல் ஏழாம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரிலும் இவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா நேற்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பல்வேறு கிரிக்கெட் தலைவர்களும் தங்களது கருத்தை பதிவுசெய்து வருகின்றனர்.இன்று சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் “கிரிக்கெட் விளையாட்டு ஒரு ஜென்டில்மேன் விளையாட்டாக விளையாடப்பட்டு வருகின்றது.நேர்மையான வழியில் விளையாடப்படும் விளையாட்டாகவே நான் எண்ணுகின்றேன். இது துரதிர்ஷ்டவசமான சம்பவம் தான் என்றாலும் அதற்கான சரியான தண்டனை தற்போது வழங்கப்பட்டுள்ளது. வெற்றி பெறுவது முக்கியம் தான் ஆனால் அதைவிட முக்கியம் நாம் எப்படி வெற்றி பெறுகின்றோம் என்பது என” பதிவிட்டுள்ளார்.

Advertisement